சென்னை : சென்னையில் கடந்த சில நாட்களாக நிறுத்தப்பட்டிருந்த மின்சார ரயில் சேவை, இன்று முதல் மீண்டும் தொடங்கியுள்ளது. இதனால் புறநகர் பகுதிகளுக்கு செல்லும் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த சில நாட்களாக மறுசீரமைப்பு பணிகள் நடத்தப்பட்டு வந்தது. இதனால் தாம்பரம்-கடற்கரை, கடற்கரை - செங்கல்பட்டு மார்க்கங்களில் செல்லும் மின்சார ரயில்களின் சேவை நிறுத்தப்பட்டிருந்தது. அதோடு வெளியூர்களில் இருந்து வரும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாம்பரம் ரயில் நிலையத்தில் நிற்காமலும் சென்று வந்தன. இதனால் புறநகர்களுக்கு செல்லும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
மின்சார ரயில் சேவையில் செய்யப்பட்ட இந்த திடீர் மாற்றத்தால் சென்னையில் காலை மற்றும் மாலை வேளைகளில் வழக்கத்தை விட பஸ்கள் மற்றும் ஆட்டோக்களில் அதிக கூட்டம் காணப்பட்டது. பலர் சொந்த வாகனங்களிலேயே பயணிக்க துவங்கியதால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மெட்ரோ ரயில்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்தது.
முதலில் ஆகஸ்ட் 14 வரை மட்டுமே மின்சார ரயில் சேவை நிறுத்தப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்திருந்த நிலையில், பிறகு ஆகஸ்ட் 18 வரை 55 மின்சார ரயில்களின் சேவை நிறத்தப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்தது. சீரமைப்பு பணிகள் நிறைவடைந்து ஆகஸ்ட் 19ம் தேதி முதல் தான் மின்சார ரயில்கள் இயக்கப்படும் செல்லப்பட்டது. சீரமைப்பு பணிகள் தற்போது நிறைவடைந்து விட்டதால், முற்பகலுக்கு மேல் ரயில் சேவை மீண்டும் இயல்பாக தொடங்கியது.
செங்கல்பட்டு-தாம்பரம்-கடற்கரை மின்சார ரயில் போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியுள்ளதால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதோடு தாம்பரத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்களும் வழக்கம் போல் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அனைத்து ரயில்களும் வழக்கமான கால அட்டவணைப்படி இயக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
{{comments.comment}}