மும்பை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் ஒரு தோல்வியைத் தழுவியுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக மும்பையில் நடந்த போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றியைப் பெற்றது.
மும்பை இந்தியன்ஸ் சேசிங் ஹைலைட்ஸ்
சேசிங்கில் தொடக்கத்திலிருந்தே அசத்தியது மும்பை இந்தியன்ஸ் அணி. தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய ரியான் ரிக்கல்டன் மற்றும் ரோஹித் சர்மா இருவரும் அடித்துப் பிரித்து விட்டனர். 19 பந்துகளில் 24 ரன்களைக் குவித்து ரிக்கல்டன் ஆட்டமிழந்தாலும் கூட ரோஹித் விடவில்லை. வச்சு செய்து விட்டார். அதிரடியாக சிக்ஸர்களையும், பவுண்டரிகளையும் விளாசிய அவரை தடுத்து நிறுத்த சென்னை பவுலர்கள் கடுமையாக போராட வேண்டியிருந்தது.
ரோஹித் சர்மாவின் நாள் இன்று. A Lion is always a Lion என்று சொல்வது போல, ரோஹித் சர்மா தனது எனர்ஜியான ஆட்டத்தை இன்று காட்டி மிரட்டி விட்டார். 33 பந்துகளில் தனது 50 ரன்களை எட்டி மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார்.
ரோஹித் சர்மாவுக்கு தான் சற்றும் சளைத்தவன் இல்லை என்று சூர்ய குமார் யாதவ் அசத்தி விட்டார்.. 26 பந்துகளில் 50 ரன்களைத் தொட்டு மிரட்டினார் சூர்ய குமார் யாதவ். ரோஹித்தும், சூர்யகுமார் யாதவும் இணைந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சிறப்பான வெற்றியைத் தேடிக் கொடுத்தனர். ரோஹித் சர்மா 76 ரன்களும், சூர்ய குமார் யாதவ் 68ரன்களும் எடுத்தனர். இருவரும் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 113 ரன்கள் குவித்து சென்னை அணியின் கதையை முடித்து விட்டனர்.
முன்னதாக டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்டிக் பாண்ட்யா தனது அணி முதலில் பீல்டிங் செய்யும் என்று அறிவித்தார். இதையடுத்து களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தொடக்கம் சொதப்பலாக அமைந்தது. ரச்சின் ரவீந்திரா (15) மற்றும் ஷேக் ரஷீத் (19) இருவரும் பெரிய ஸ்கோருக்கான களம் அமைக்க முயன்றனர். ஆனால் இருவரும் அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேறினர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் இந்த முறையும் பவர் பிளேவுக்குள் 50 ரன்களைத் தாண்ட முடியாமல் போனது பெரும் சோகம்தான். நடப்புத் தொடரில் 5 முறை இதுபோல சொதப்பியுள்ளது சென்னை அணி.
இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே அடித்துப் பிரித்து விட்டார். சிறப்பாக ஆடிய அவர் 15 பந்துகளில் 32 ரன்களைக் குவித்து கண்களுக்கு விருந்து படைத்தார். ஆனால் அவரைப் போன்ற வேகத்தை பிற வீரர்களிடம் பார்க்க முடியவில்லை. மாத்ரே அவுட்டானதால் சென்னை அணி பெரிய ஸ்கோரை எட்டும் வாய்ப்பையும் நழுவ விட்டது. இருப்பினும் ரவீந்திர ஜடேஜாவும், சிவம் துபேவும் சிறப்பாக ஆடி அணியின் ஸ்கோரை வலுப்படுத்தினர். முதலில் சிவம் துபே அரைசதம் போட்டார். அவருக்குப் பின்னர் வந்த தோனி பெரிய ஸ்கோரை எடுக்க முடியாமல் 4 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இன்றைய போட்டியில் இன்னொரு முக்கிய அம்சம் ரவீந்திர ஜடேஜா அரை சதம் போட்டதுதான். கடைசி ஓவர்களில் பொறுப்பாக ஆடிய ஜடேஜா தனது அரை சதத்தை எட்டி சென்னை அணியின் ஸோகைரையும் 170 ரன்களுக்கு மேல் கொண்டு செல்ல உதவினார். 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 176 ரன்களை எடுத்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். இந்த ஸ்கோர் நிச்சயம் 190 வரைக்கும் கூட போயிருக்கலாம். இடையில் ஏற்பட்ட சொதப்பலால் அது வாய்ப்பில்லாமல் போய் விட்டது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் பவுலிங், பீல்டிங் இரண்டுமே இன்று சிறப்பாக இருந்தது. பும்ரா 2 விக்கெட்களைச் சாய்த்தார். சஹர், சான்ட்னர், அஸ்வனி ஆகியோருக்கு தலா 1 விக்கெட் கிடைத்தது.
இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே இருந்து வரும் தங்கம் விலை
Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
Box office: தமிழ்நாட்டில் குட் பேட் திரைப்படத்தின் கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா..?
பயனாளர்களின் தனிப்பட்ட விவரங்களை பாதுகாக்க.. புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.. மெட்டா நிறுவனம்
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
தமிழ்நாட்டில்.. இன்று மழையும், வெயிலும் இருக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்!
காஷ்மீர் beautiful காஷ்மீர்.. தீவிரவாதிகள் சீரழிக்க நினைக்கும் காஷ்மீரின் பேரெழிலும் இயற்கை அழகும்!
ஒவ்வொரு பயங்கரவாதியையும், அவர்களுக்கு உதவுபவர்களையும் வேரறுப்போம்.. பிரதமர் மோடி ஆவேசம்
கும்பகோணத்தில் விரைவில் கலைஞர் பல்கலைக்கழகம் அமைக்கப்படும்: முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு!
{{comments.comment}}