சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது தக்க வைக்கும் வீரர்கள் பட்டியலை ரெடி செய்து விட்டது. இதனால் ரசிகர்களிடையே வரும் சீசனில் அவர்களது மனம் கவர்ந்த தல.. எம்.எஸ். தோனி விளையாடுவாரா என்ற படபடப்பு நிலவுகிறது. காரணம், பிசிசிஐயின் கையில்தான் அது உள்ளது.
ஐபிஎல் 2025 தொடருக்கான எதிர்பார்ப்புகளும், ஆர்வமும் இப்போதே கிளம்பி விட்டன. ஒவ்வொரு அணியும் அடுத்த சீசனுக்கான தயார் நிலைக்கு மாற ஆரம்பித்துள்ளன. விரைவில் மெகா வீரர்கள் ஏலம் நடைபெறவுள்ளது. இதற்கு முன்பாக வீரர்களை தக்க வைக்கும் பட்டியலை ஒவ்வொரு அணியும் ரெடி செய்ய ஆரம்பித்துள்ளன. ஆனால் இதுதொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவிக்கப் போகும் கொள்கை முடிவுக்காக அத்தனை அணிகளும் காத்துள்ளன. இந்த கொள்கை அறிவிப்பைப் பொறுத்துதான் பல வீரர்கள் தொடர்ந்து விளையாடுவது குறித்து தீர்மானிக்க முடியும் என்பதால் இதில் ரசிகர்களும் கூட படபடப்போடுதான் காத்துள்ளனர்.
குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தோனி வரும் சீசனில் விளையாடுவாரா மாட்டாரா என்பது பிசிசிஐ அறிவிக்கப் போகும் வீரர்கள் தக்க வைக்கும் கொள்கை விளக்கத்தில்தான் அடங்கியுள்ளது. 2023ம் ஆண்டு சீசனோடு தோனி ஓய்வு பெறுவார் என எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் அவர் 2024 சீசனிலும் ஆடினார். ஆனால் இந்த முறை கேப்டனாக அவர் விளையாடவில்லை. வீரராக மட்டுமே பங்கேற்றார். இருந்தாலும் ரசிகர்களுக்கு சந்தோஷம்தான். நீங்க வந்தா மட்டும் போதும் என்ற திருப்தியோடு அவர்கள் தோனியை ரசித்து மகிழ்ந்தனர். ஆனால் 2025 சீசனிலும் தோனி விளையாடுவாரா என்பது இன்று வரை சந்தேகமாகவே உள்ளது.
இந்த நிலையில் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் 5 வீரர்களை தக்க வைக்க முடிவு செய்து பட்டியலையும் தயார் செய்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் ரசிகர்களிடையே பரபரப்பான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஒரு அணியால் 6 வீரர்கள் வரை தக்க வைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. சிஎஸ்கேவின் வீரர்கள் தக்க வைக்கும் பட்டியலில் தற்போதைய கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, சிவம் துபே, மதீஷா பதிரனா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.. அத்தோடு, தோனியும் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.
தீபக் சஹர், தேவன் கான்வே, டெரில் மிட்சல், மஹீஷ் தீக்ஷனா ஆகியோரை கைவிட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முடிவு செய்துள்ளதாம். பார்க்கலாம்.. தோனி விளையாடுவாரா அல்லது பார்வையாளராக அவரை பார்க்கப் போகிறோமா என்பதை.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
சாராயம் விற்ற பணத்தில் தான் திமுகவின் முப்பெரும் விழா நடந்துள்ளது: அண்ணாமலை
டெல்லி சந்திப்பின்போது.. எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷாவிடம் சொன்ன.. "அந்த" 2 விஷயங்கள்!
அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அலர்ட்!
விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி கேட்ட வழக்கு: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
நடிகர் ரோபோ சங்கர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
துளசி.. திருமாலுக்கு உகந்தது.. ஏன் என்று தெரியுமா?
இட்லி கடை படத்தின் டிரெய்லர் வெளியீடு தேதியை அறிவித்த படக்குழு
பீகாரில் மட்டுமல்ல கர்நாடகாவிலும் ஓட்டு திருட்டு : ராகுல் காந்தி போட்ட ஹைட்ரஜன் குண்டு
ரெஸ்ட் ரூம் போனால் கூட இனி சொல்லிட்டுத்தான் போகணும் போல.. எடப்பாடி பழனிச்சாமி கோபம்
{{comments.comment}}