சென்னை.. மற்றும் சுற்றுவட்டார பகுதியில்.. இன்றும் வெளுத்து வாங்கிய வெயில்.. மக்கள் அவதி..!

May 31, 2024,03:34 PM IST

சென்னை: சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில்  செம்ம வெயில் அடித்து வருகிறது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.


அக்னி நட்சத்திரம் முடிந்து இரண்டு நாட்கள் ஆகிறது. ஆனால் அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும் வெயில் அதிகரித்து மக்களை வாட்டி எடுத்து வருகிறது. குறிப்பாக வட இந்தியா பகுதிகளில் கடுமையான வெப்பமும் கூடவே வெப்ப அலையும் சேர்ந்து தாக்கி வருகிறது. டெல்லியில் அதிகபட்ச வெப்பநிலை 107 டிகிரி ஃபாரன்ஹீட்டை தொட்டது. இதனால் டெல்லியில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


வட இந்தியாவில் பல மாநிலங்களில் வெளியே வர முடியாத அளவிற்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இதன் எதிரொலியாக தற்போது வட கடலோர  பகுதிகளில் வெயில் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறுகையில், 




சென்னை,திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று வெப்பநிலை வேகமாக உயர்ந்து வருகிறது. காலை 11 மணிக்கே 40 டிகிரி செல்சியஸை தாண்டி வெயில் சுட்டெரித்தது. நுங்கம்பாக்கம் பகுதிகளில் கடல் காற்று வீசியதால், அப்பகுதியில் வெக்கை சற்று தணிந்துள்ளது. 


அதேசமயம், மீனம்பாக்கம் சுற்று வட்டாரப் பகுதிகளில் வெயில் தாக்கம் கடுமையாக இருந்தது. இங்கு வெப்பநிலை 43 டிகிரி செல்சியஸை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருத்தணியில் 43 டிகிரி செல்சியஸும், வேலூரில் 43 டிகிரி செல்சியஸை தாண்டியும் வெப்பநிலை பதிவாகும் என தமிழ்நாடு வெதர்மேன் அறிவித்துள்ளார்.


சென்னையில் கடந்த சில நாட்களாகவே வெயில் வெளுத்து வருகிறது. ஆங்காங்கு மின்வெட்டும் ஏற்படுவதால் மக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக இரவு நேர மின்வெட்டு சில பகுதிகளில் இருப்பதாக மக்கள் கூறுகிறார்கள்.

சமீபத்திய செய்திகள்

news

கும்மிருட்டில் மூழ்கிய சென்னை.. பலத்த காற்றுடன் கொட்டித் தீர்த்த கன மழையால் மக்கள் ஹேப்பி!

news

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்.. பாக். தாக்குதலுக்கு பதறி துடித்தவர்கள் கள்ள அமைதி ஏன்?.. சீமான்

news

தமிழக மீனவர்களின் படகுகளை உடைத்து.. கடலில் மூழ்கடிக்க சிங்கள அரசு திட்டம்.. டாக்டர் ராமதாஸ்

news

2 மாதங்களில் 5 தற்கொலை.. எப்போதுதான் ஒழியும்.. உயிர்க்கொல்லி நீட் தேர்வு?.. டாக்டர் அன்புமணி ராமதாஸ்

news

High BP: உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க தக்காளி கை கொடுக்கும்.. எப்படி தெரியுமா?

news

Liver health: உங்கள் கல்லீரலை பாதிக்கும் மூன்று உணவுகள்.. இதை தவிருங்கள் மக்களே!

news

ராஜஸ்தான் எல்லைப் பகுதி வழியாக.. இந்தியாவுக்குள் ஊடுறுவிய.. பாகிஸ்தான் ரேஞ்சர் அதிரடி கைது

news

பாகிஸ்தான் கப்பல், இமெயில், போஸ்ட் எதுக்கும் அனுமதி கிடையாது...இந்தியா அதிரடி

news

நாளை அக்னி நட்சத்திரம் 2025 ஆரம்பம்...கத்திரி வெயில் தோன்றிய கதை தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்