சென்னை : பொங்கல் விடுமுறை முடிந்து பலரும் சென்னைக்கு திரும்பி வருவதால் சென்னைக்கு வரும் சாலைகள் அனைத்திலும் பல கி.மீ., தூரத்திற்கு வாகனங்கள் அணிவித்து நிற்கின்றன. மிக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகை இந்த ஆண்டு ஜனவரி 15ம் தேதியன்று கொண்டாடப்பட்டது. ஜனவரி 14ம் தேதி முதல் ஜனவரி 18 வரை பள்ளிகளுக்கு விடுமுறை என தமிழக அரசு அறிவித்தது. தொடர் விடுமுறை காரணமாக பலரும் ஜனவரி 10ம் தேதியில் இருந்தே சொந்த ஊர்களுக்கு செல்ல துவங்கி விட்டனர். ஆரம்பத்தில் ரயில் மற்றும் பஸ்களில் மட்டுமே கூட்டம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், ஜனவரி 13ம் தேதி முதல் பலரும் சொந்த வாகனங்களில் ஊர்களுக்கு புறப்பட்டதால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதற்கு நேர்மாறாக பொங்கல் விடுமுறையின் போது நான்கு நாட்களும் சென்னையின் முக்கிய சாலைகள் பலவும் வெறிச்சோடி காணப்பட்டன. சுமார் 6 லட்சம் வரையிலான மக்கள் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்றதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு செல்லுவோரின் அதிகமாகவே இருந்தது. பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர் செல்லும் மக்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள், சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இந்நிலையில் பொங்கல் பண்டிகை முடிந்து பலரும் சென்னை திரும்பி வருவதால் கடந்த இரண்டு நாட்களாகவே சென்னையின் புறநகர் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்தது. அதிலும் நேற்று மாலை முதல் மிக அதிகமானவர்கள் சென்னை நோக்கி பயணித்து வருவதால் கிளாம்பாக்கம் பகுதியில் 5 கி.மீ., தூரத்திற்கு வாகனங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. பள்ளி, கல்லூரிகள், அலுவலகம் செல்வோர் இன்று கட்டாயம் ஊர் திரும்ப வேண்டிய நிலை உள்ளதால் மதுரையில் இருந்து சென்னை செல்லும் ஆம்னி பஸ்களின் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டு, ரூ.6000 வரை உள்ளது குறிப்பிடத்தக்கது.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜன30ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு.. இதுவரை 12.80 லட்சம் பேர் மனு
அபிலாஷைகளை நிறைவேற்றும் அபிஜித் வழிபாடு!
71 மாவட்டங்களுக்கும் தலைவர்கள்.. ஒரு வழியாக அறிவித்தது காங்கிரஸ்!
மீண்டும் மீண்டும் தள்ளிப் போகும் தெறி ரீ ரிலீஸ்...காரணம் இது தானா?
பொங்கல் முடிந்து சென்னை திரும்பும் மக்கள்...5 கி.மீ.,க்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்
இன்று டில்லி சிபிஐ அலுவலகத்தில் 2வது முறையாக ஆஜராகிறார் விஜய்
தமிழ்நாடு அரசு சார்பில்.. தேசிய அளவிலான செம்மொழி இலக்கிய விருது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தவெக தலைவர் விஜய் இன்று இரவே டெல்லி பயணம்?.. நாளை மீண்டும் சிபிஐ விசாரணை!
மக்களே.. நான் நெகிழ்ந்து போயிட்டேன்.. என்னோட மனச ஆழமா தொட்டுட்டீங்க.. ஜீவா உருக்கம்
{{comments.comment}}