சென்னையைச் சுற்றிப் பார்க்க 'சென்னை உலா': புதிய சுற்றுலாப் பேருந்து சேவை தொடக்கம்!

Jan 14, 2026,05:51 PM IST

சென்னை: சென்னையை சுற்றிப் பார்க்க சென்னை உலா சுற்றுலா பேருந்து சேவையை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் இன்று தொடங்கி வைத்தார்.


சென்னைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் நகரின் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை எளிதாகவும், வசதியாகவும் சுற்றிப் பார்க்கும் வகையில் 'சென்னை உலா' என்ற புதிய ஒருநாள் சுற்றுலாப் பேருந்து சேவையைத் தமிழக அரசு தொடங்கியுள்ளது.




இந்தப் பேருந்து சென்னை தீவுத் திடல், அரசு அருங்காட்சியகம் (எழும்பூர்), மெரினா கடற்கரை, விவேகானந்தர் இல்லம், கபாலீஸ்வரர் கோவில், புனித தோமையார் மலை மற்றும் வண்டலூர் உயிரியல் பூங்கா உள்ளிட்ட  இடங்களை இணைக்கிறது. இந்த சுற்றுலா பேருந்தில் செல்ல நாள் ஒன்றிற்கு ரூ.50 கட்டணமாக பெறப்படுகிறது. காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை இப்பேருந்து செயல்படும். 


குளிர்சாதன வசதி கொண்ட இந்தப் பேருந்துகளில் சுற்றுலா வழிகாட்டிகள் இருப்பார்கள். அவர்கள் ஒவ்வொரு இடத்தின் வரலாற்றுச் சிறப்புகளையும் பயணிகளுக்கு விளக்குவார்கள். சுற்றுலாப் பயணிகள் TTDC-யின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது தீவுத் திடலில் உள்ள அலுவலகம் மூலம் தங்களது பயணத்தை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கல்யாண விருந்து.. பந்தி முதல் டிஜே நடனம் வரை.. பாப்கார்ன் கல்யாணமும்... பாரதிராஜா ஹீரோயினும்!

news

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்.. முதல்வர் விஜய் போட்ட ஸ்டிரிக்ட் உத்தரவு

news

இடைத்தேர்தல் களம்: தாராபுரம், மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் 4 நாட்கள் பிரச்சாரம்

news

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணம் : கடுமையாக விமர்சித்த டி.ஆர்.பி. ராஜா

news

அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பெயர் மிஸ்ஸிங்

news

புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாளை வழிபட்டால்.. குடும்பத்தில் வளம் பெருகும்!

news

ரூ.100 கோடி மோசடி வழக்கு: மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆஜர்

news

புரட்டாசி மாதம் வந்தாச்சு.. 6வது தமிழ் மாதம்.. பெருமாள் வழிபாட்டுக்கு உகந்த புனித மாதம்!

news

த.வெ.க அரசின் முதல் சட்டப்பேரவைக் தொடர்: 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்