புதுடெல்லி: செஸ் ஒலிம்பியாட் தொடரில் முதல்முறையாக தங்கம் என்ற இந்திய அணிக்கு மூன்று கோடியே 20 லட்சம் ரூபாய் பரிசு தொகை அறிவித்துள்ளது இந்திய செஸ் கூட்டமைப்பு.
45 ஆவது செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்திய வீரர்கள், குகேஷ், அர்ஜுன் எரிகைசி மற்றும் ஆர் பிரக்ஞானந்தா ஆகியோர் அடங்கிய ஆண்கள் அணியும், ஹரிகா, தானியா சச்தேவ், ஆர் வைஷாலி தலைமையிலான மகளிர் அணியும் பங்கேற்றனர். இதில் குகேஷ் 11 சுற்றுகளில் 10 சுற்றுகளில் வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து 22 க்கு 21 புள்ளிகள் பெற்று இந்தியாவை முதல் இடத்திற்கு முன்னேற்றமடைய செய்தார். அதேபோல் பெண்கள் அணியும் இறுதிப் போட்டியில் அஜர்பைஜானவை தோற்கடித்து தங்கத்தை வென்றனர்.

செஸ் ஒலிம்பியாட் தொடரில் ஆண்கள் அணியும் பெண்கள் அணியும் இந்திய அணிக்கு முதல் முதலாக இரண்டு தங்கத்தை வென்று கொடுத்து அசத்தலான சாதனை படைத்துள்ளன.இதற்காக அகில இந்திய செஸ் கூட்டமைப்பு கடந்த புதன்கிழமை புதுடில்லியில் செஸ் ஒலிம்பியாட் தொடரில் தங்கம் வென்ற இந்திய அணிக்கு பாராட்டு விழா நடத்தியது. அப்போது செஸ் போட்டியில் கலந்து கொண்ட இந்திய அணிக்கு மூன்று கோடியே 20 லட்சம் ரூபாயை பரிசுத்தொகை வெகுமதியாக அறிவித்தது.
இந்தத் தொகையை வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு தலா 25 லட்சம் ரூபாயும், பயிற்சியாளர்களான அபிஜீத் குண்டே மற்றும் ஸ்ரீநாத் நாராயணன் ஆகியோருக்கு தலா ரூ.15 லட்சமும் பரிசாக வழங்கப்படும் என இந்திய செஸ் கூட்டமைப்பு தெரிவித்தது. அப்போது பிரதமர் நரேந்திர மோடி செஸ் வீரர்களுக்கு அவர்களின் அர்ப்பணிப்பை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
விஜய் பிரசாரம்... ஈரோட்டில் தனியார் பள்ளிக்கு நாளை விடுமுறை
வேலூர் ஶ்ரீபுரம் பொற்கோவிலில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சாமி தரிசனம்
OVERCOMING STRUGGLES.. சவால்களை நொறுக்கி.. சாதனைகளைப் படைப்போம்!
தங்கம் விலை இன்றும் உயர்வு... புதிய உச்சத்தில் வெள்ளி விலை உயர்வு!
மார்கழி 02ம் நாள் வழிபாடு : திருப்பாவை, திருவெம்பாவை பாடல் 02 வரிகள்
Healthy Cooking: சுவையான மிளகு குழம்பு செய்வது எப்படி?
சிந்தனைத்துளிகள்.. ரகசியமான வாழ்கைப் பாதையில் மாற்றம் ஒன்றே மாறாதது!
ஆணுக்கு சமமாய் நானும் தான்!
The Power of Hope... நம்பிக்கையின் சக்தி.. பலம் தரும்.. சவால்களைச் சந்திக்க தைரியம் தரும்!
{{comments.comment}}