டெல்லி:பயணிகளின் அடையாளத்தை பாதுகாப்பாகவும், விமான நிலையங்களில் விரைவாக சரிபார்க்கவும் பயோமெட்ரிக் விவரங்கள் அடங்கிய இ பாஸ்போர்ட் பயன்பாடு அமலுக்கு வந்துள்ளது .
சிப் பொருத்தப்பட்ட பயோமெட்ரிக் இ பாஸ்போர்ட் முறைகள் ஏற்கனவே அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜப்பான், ஆஸ்திரேலியா, உட்பட 120க்கும் மேற்பட்ட நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.அந்த வரிசையில் தற்போது இந்தியாவும் இணைந்துள்ளது. இதன் பயன்பாடு எல்லை பாதுகாப்பை மேம்படுத்துதல், குடியேற்ற நடைமுறைகளை நெறிப்படுத்துதல், அடையாளத் திருட்டை தடுத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதனை அடுத்து கடந்த 2024 ஆம் ஆண்டு இ பாஸ்போர்ட்டுகளை செயல்படுத்த நாகூர், ஜம்மு, சிம்லா, அமிர்தரஸ், ஜெய்ப்பூர், சென்னை, ஹைதராபாத், சூரத், உள்ளிட்ட முக்கிய நகரங்களில் சோதனை முயற்சிகள் நடத்தப்பட்டு வந்தன.
இந்த நிலையில் இந்தியாவில் பயோமெட்ரிக் விபரங்கள் அடங்கிய இ-பாஸ்போர்ட் பயன்பாடு அமலுக்கு கொண்டு வந்துள்ளது வெளியுறவுத்துறை.
சிப் பொருத்தப்பட்ட பாஸ்போர்ட் அல்லது மின்னணு பாஸ்போர்ட் ( இ- பாஸ்போர்ட்) என்பது நவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட ஒரு சர்வதேச அடையாள ஆவணமாகும் . இதில் மைக்ரோசிப் அல்லது ( ரேடியோ அதிர்வெண் அடையாளம்) சிப் பொருத்தப்பட்டிருக்கும்.
அதாவது இந்த பாஸ்போர்ட் புத்தகத்தின் முன் அல்லது பின்புறக் கட்டத்தில் மைக்ரோசிப் பொறுத்தப்பட்டிருக்கும்.
சிப்பில் பயணிக்கும் நபரின் அடையாளத் தகவல்கள், புகைப்படம், கைரேகை மற்றும் கணக்கீட்டு விவரங்கள் உள்ளன. மறைக்கப்பட்ட தகவல்கள் உள்ளதால், தரவுகள் பாதுகாப்பாக இருக்கும். பயனர் அடையாளத்தை சரிபார்க்க உயர் தரம் கொண்ட பயோமெட்ரிக் முறைகள் பயன்படுத்தப்படும்.
விமான நிலையங்களில் சிப்கானர் ( சிப் ஸ்கேனர்) மூலம் பாஸ்போர்ட் சரிபார்க்கப்படுகிறது.மானுடத்துடன் தொடர்பு இல்லாமல் ( contactless) சரிபார்ப்பு நடைபெறுவதால் வேகமாக செயல்படும்.
சிப் பொருத்தப்பட்ட பாஸ்போர்ட்டின் நன்மைகள்:
சிப்பில் அடையாளத் தகவல்கள் குறியீட்டாக இருப்பதால், போலியான பாஸ்போர்ட்களை உருவாக்குவது கடினம்.
பல்வேறு நாடுகள் E- passport- ஐ அங்கீகரித்து வருகின்றன.
பயோமெட்ரிக் சரிபார்ப்பு மூலம் நபரின் அடையாளம் துல்லியமாக உறுதி செய்யப்படுகிறது.
விமான நிலையங்களில் காத்திருப்பு நேரம் குறையும்.
தரவுகள் பாதுகாப்பாக உள்ளதால், அடையாளத் திருட்டு குறைவாக இருக்கும்.
பொள்ளாச்சி வழக்கில்.. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதலாக நிவாரணம் வழங்க.. முதல்வர் உத்தரவு..!
என் குழந்தைகள் என் உயிர்.. என்னிடமிருந்து பிரிக்க முயன்றார்கள்.. நடிகர் ரவி மோகன் பரபரப்பு அறிக்கை
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு 52 சதவீதம் குற்றங்கள் அதிகரிப்பு..பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
இந்தியாவில் ஐபோன் உற்பத்தி செய்ய வேண்டாம்...ஆப்பிள் சிஇஓ.,க்கு டிரம்ப் உத்தரவு
cyclone shakthi பெங்களூருக்கு ஆரஞ்சு அலர்ட்...புயல் காற்றுடன் மழை வெளுக்க போகுதாம்
இந்தியாவில் அமலுக்கு வந்தது.. பயோ மெட்ரிக் விவரங்கள் அடங்கிய இ-பாஸ்போர்ட்..!
தொழிற்சாலையில் டேங்க் வெடிப்பு.. பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்: டாக்டர் ராமதாஸ்!
சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின்.. kissa47 பாடல் நீக்கம்.. படக்குழு அறிவிப்பு!
வாடிக்கையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய தங்கம் விலை... சவரனுக்கு ஒரே நாளில் ரூ.1560 குறைவு!
{{comments.comment}}