43 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு .. யுஏஇவில் டிரைவிங் டெஸ்ட் தேவையில்லை.. இந்தியா இருக்கா?

Apr 30, 2023,04:01 PM IST
துபாய்: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில், 43 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு டிரைவிங் டெஸ்ட் கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியா இடம் பெறவில்லை. அதேபோல பாகிஸ்தானும் இல்லை.

வழக்கமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு வருவோர், அங்கு டிரைவிங் டெஸ்ட்டில் பாஸ் செய்தால்தான் அவர்களுக்கு அந்த நாட்டில் வாகனம் ஓட்டுவதற்கான லைசென்ஸ் கிடைக்கும். அதில் தற்போது சில சலுகைகளை வழங்கியுள்ளது எமிரேட்ஸ் அரசு.

அதன்படி 43 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு டிரைவிங் டெஸ்ட்டிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவரவர் நாட்டில் பெறப்பட்ட டிரைவிங் லைசென்ஸைக் காட்டி எமிரேட்ஸ் டிரைவிங் லைசென்ஸை வாங்கிக் கொள்ளலாம் என்று எமிரேட்ஸ் அரசு அறிவித்துள்ளது.




இதுதொடர்பான முடிவு எமிரேட்ஸ் வெளியுறவுத்துறை மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு பெடரல் அத்தாரிட்டி ஆகியவற்றுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு எடுக்கப்பட்டது. இதன் மூலம் நாட்டின் சுற்றுலா மேலும் சிறப்பாக வளரும் என்று எமிரேட்ஸ் அரசு நம்புகிறது.  முதலீடுகளும் அதிகரிக்கும் என்றும் அரசு நம்புகிறது.

இருப்பினும் இந்தப் பட்டியலில் இந்தியா இல்லை. அதேபோல பாகிஸ்தானும் பட்டியலில் இடம் பெறவில்லை. தெற்காசிய நாடுகள் வரிசையில், எந்த நாடும் இப்பட்டியலில் இடம் பெறவில்லை என்பது தெற்காசிய நாட்டினரை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.

43 நாடுகள் பட்டியல்:

ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா,  பஹ்ரைன், பெல்ஜியம், கனடா, டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ்,  ஹாங்காங், ஐஸ்லாந்து, அயர்லாந்து, இத்தாலி, ஜப்பான், தென் கொரியா, குவைத், லக்சம்பர்க், மால்டா, நெதர்லாந்து, நியூசிலாந்து, நார்வே, ஓமன், போலந்து, போர்ச்சுகல், கத்தார், ருமேனியா, சவூதி அரேபியா,  சிங்கப்பூர், ஸ்லோவேகியா, ஸ்பெயின், ஸ்வீடன், சுவிட்சர்லாந்து,  தைவான், துருக்கி, இங்கிலாந்து,  அமெரிக்கா, வாடிகன் சிட்டி, லாத்வியா, எஸ்டோனியா, லிதுவேனியா, ஹங்கேரி, செக் குடியரசு.

இந்த நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு கண் பார்வை சோதனை மட்டுமே நடத்தப்படும். தங்களது நாட்டு லைசென்ஸைக் கொடுத்து விட்டு எமிரேட்ஸ் லைசென்ஸை பெற்றுக் கொள்ளலாம்.  மற்ற நாட்டுக்காரர்கள் முழுமையான டிரைவிங் டெஸ்ட் எடுத்தாக வேண்டும்.

இப்பட்டியலில் இந்தியா இடம் பெறாதது நம்ம நாட்டுக்காரர்களுக்கு பெரும் ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்