மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவோம்.. சட்டசபையில் முதல்வர் விஜய் கன்னிப் பேச்சு

May 12, 2026,07:04 PM IST

சென்னை: மக்களின் எதிர்பார்ப்புகளை கவனத்திற்குக் கொண்டு அதற்குத் தேவையான திட்டங்களையும் சட்டங்களையும் நிறைவேற்றும் பொறுப்பு நமக்கு உள்ளது என்று முதல்வர் சி ஜோசப் விஜய் தெரிவித்துள்ளார்.


சட்டசபையில் இன்று முதல்வர் ஜோசப் விஜய் பேசிய கன்னிப் பேச்சு இது என்பது குறிப்பிடத்தக்கது.


சட்டசபை புதிய சபாநாயகராக ஜேசிடி பிரபாகரன் இன்று பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அவரை அவை முன்னவர் கே.ஏ.செங்கோட்டையனும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும் சேர்ந்து அழைத்துச் சென்று இருக்கையில் அமர வைத்தனர். அதன் பின்னர் கட்சிகளின் தலைவர்கள் சபாநாயகரை வாழ்த்திப் பேசினர்.


எல்லாக் கட்சிகளிலிருந்தும் ஒரு தலைவர் மட்டுமே பேசினார். ஆனால் அதிமுகவிலிருந்து மட்டும் எடப்பாடி பழனிச்சாமி, எஸ்.பி. வேலுமணி என இருவர் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது.


கடைசியாக முதல்வர் சி. ஜோசப் விஜய் வாழ்த்துரை வழங்கினார். தனது பேச்சின்போது முதல்வர் விஜய் குறிப்பிட்டதாவது:




மக்களுக்காக மக்களால் மக்களே நடத்துவதுதான் ஜனநாயக ஆட்சி. இன்று மக்களாட்சி அமைந்துள்ளது. மக்களிடம் உள்ள பெரும் எதிர்பார்ப்பு, எதிர்பார்ப்புகளை கவனத்திற்குக் கொண்டு வந்து அவற்றை நிறைவேற்றிய திட்டங்கள் சட்டங்களை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது. 


இங்கு அனைவரும் சமம்.  ஒரு உறுப்பினரைக் கொண்ட கட்சிகள் பல இங்கு இடம் பெற்றிருந்தாலும் அவர்களது கருத்துக்களுக்கும், அதிக உறுப்பினர்கள் கொண் கட்சிகளின் கருத்துக்களுக்கும் சமமாகவே மதிப்பளிக்கப்படும். நல்லது எடுக்கப்பட்டு, அல்லவை நிராகரிக்கப்பட்டு ஜனநாயகத்தின் இதயமாகவும், மூளையாகவும் பேரவை செயல்படும். அதற்குரிய வiகையில் நடத்திச் செல்லும் பண்பை பெற்றிருப்பவரையே தவெக முன்மொழிந்து சபாநாயகர் ஆசனத்தில் அமர வைத்துள்ளது.


தவெக உறுப்பினர்கள் பேரவைத் தலைவருக்கு உதவிக்கரமாக இருப்பார்கள். பேரவையின் மாண்பையும், கண்ணியத்தையும் காக்க வேண்டிய பொறுப்பை உங்களிடம் ஒப்படத்துள்ளனர் என்றார் விஜய்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம் இடைத்தேர்தல் 2026 பிரச்சாரம்.. முதல்வர் விஜய் பேச்சு எப்படி இருந்தது?

news

திமுக, அதிமுக, பாஜக கூட்டணி... வீரமணி விவகாரத்தில் ஸ்டாலினுக்கு கேள்வி.. முதல்வர் விஜய் விளாசல்

news

Good Evening Friends: மாலை நேர ஸ்நாக்ஸ் 'மொறு மொறு துணுக்கு'!

news

தை பொறந்தது அத்தை அத்தை.. உந்தன் மடி என்றும் மெத்தை மெத்தை!

news

என்னைப் பார் யோகம் வரும்.. கழுதைக்கும் யோகத்துக்கும் என்னங்க சம்பந்தம்?

news

தேர்தல் கமிஷனர் பதவி விலகாவிட்டால் அக்., 2 முதல் நாடு தழுவிய போராட்டம்: கரப்பான் ஜனதா கட்சி Warning!

news

Puzzle: அந்தாதி வினா விடை.. வர்றீங்களா விளையாடலாம்?

news

Nellai Special: வாழை இலை விருந்தும்.. நாவில் கரையும் திருநெல்வேலி சொதிக்குழம்பும்!

news

ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: விசாரணைக்காக சிறப்பு புலனாய்வு குழு (SIT) அமைப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்