- மும்மொழிக் கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி
பசித்திடும் வயிறு உண்டு!
புசித்திட உணவு இன்றி
ருசித்திடும் கனவு கண்டு
உருண்டிடும் வாழ்க்கை உண்டு!
பலருக்கு விடிகின்ற
காலை உண்டு!
இவர்களுக்கோ என்றும்
விடியாத விதி தான் உண்டு!
கற்பனையில்
அனைத்தும் கண்டு
வாழ்வதனால் கண்ட
பயன் என்ன உண்டு?

இவர்கள் வாழ்வில்
அதிகாலை உண்டு
அந்தி மாலை உண்டு
ஆனால் எதையும் உண்டு
பசியாற இல்லாமை தான் உண்டு!
கல்லாமை தான்
இவற்றுக்கெல்லாம்
காரணம் என்று
இவர்கள் கண்டு கொண்டு
ஆகும் நன்று!
(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளார்)
Dilani Sridharan Poem: பேரழகு!
சினிமா படப்பிடிப்புக்கான அனுமதியை இனி ஆன்லைனில் பெறலாம்: தமிழக அரசு அறிவிப்பு
மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் கலந்து கொண்ட விழாவில் மின்தடை
அப்பா மாதிரி நாமளும் ஆகணும்!
வேர் இன்றி விருட்சம் தான் உண்டோ?
சங்கமம்!
இரயில் சினேகம்.. ஒரு நிமிடக் கதை (21)
வாழ வைக்கும் வல்லாரைக்கு ஜே.. நினைவாற்றலைப் பெருக்கும் சூப்பர் கீரை!
பெருமிழலை குறும்ப நாயனார் திருவடிகள் போற்றி போற்றி!
{{comments.comment}}