Goodbye USA.. அமெரிக்காவிலிருந்து சென்னைக்கு புறப்பட்டார்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Sep 13, 2024,06:46 PM IST

சென்னை:   தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக 17 நாட்கள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றிருந்த முதல்வர் மு. க.ஸ்டாலின் சென்னைக்கு புறப்பட்டார்.


தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பது  தொடர்பாக கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி சென்னையில் இருந்து அமெரிக்கா சென்றார் மு.க.ஸ்டாலின். இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 29ஆம் தேதி சான் பிரான்சிஸ்கோ விமான நிலையம் வந்த முதல்வருக்கு அமெரிக்காவாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.




இதனை அடுத்து அங்கு நடைபெற்ற முதலீட்டர்கள் மாநாட்டில் பங்கு பெற்று பல முன்னணி தொழில் நிறுவன முதலீட்டாளர்களை சந்தித்து ரூபாய் 900 கோடி புத்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இதன் மூலம் சென்னை, மதுரை, கோவை, செங்கல்பட்டு, உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் 4,100 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டது.


இதனை முடித்துவிட்டு சிகாகோ சென்ற முதல்வர் பல்வேறு முன்னணி தொழில் நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்து பேசினார். ஆர்.ஜி.பி.எல்.ஐ நிறுவனத்துடன்  100 கோடி ரூபாய் முதலீடுக்கான புத்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். அமெரிக்காவில் 17 நாட்கள் தங்கியிருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் 18 நிறுவனங்களுடன் மொத்தம் ரூபாய் 7,616 கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார்.


இந்த நிலையில் தமிழ்நாட்டுக்கு பல்வேறு முதலீட்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட மகிழ்ச்சியுடன் சிகாகோ விமான நிலையத்திலிருந்து சென்னை புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இதனைத் தொடர்ந்து அவர்  தனது எக்ஸ் தளத்தில் Good bye USA என பதிவிட்டுள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அலர்ட்!

news

பசி,பட்டினியை போக்கவில்லை... தீபம் ஏற்ற வேண்டும் என கூறுகிறார்கள்: சீமான் ஆவேசம்!

news

வானுயர் ஜிஎஸ்டிபி வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது:முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

news

மெஸ்ஸியை பார்க்க முடியாமல் ரசிகர்கள் ஆவேசம்... ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மம்தா பானர்ஜி!

news

வெள்ளை யானை வழிபட்ட திருத்தலம்.. திருவானைக்கா.. தேவாரத் திருத்தலங்கள் (2)

news

திமுக அரசின் துரோகத்திற்கு எதிராக தெருவுக்கு வந்த போராடும் அரசுஊழியர்கள்: அன்புமணி ராமதாஸ் வேதனை!

news

ஜிடிபி வளர்ச்சியில் தமிழ்நாடு புதிய சாதனை.. பெரிய மாநிலங்களில் நம்பர் 1 நாமதான்!

news

தங்கம் விலையில் இன்று மாற்றமில்லை... வெள்ளியின் விலையும் சற்று குறைவு தான்!

news

Flashback 2025.. தென்னிந்தியத் திரையுலகுக்கு பெரும் சோகம் தந்து விடைபெறும் 2025!

அதிகம் பார்க்கும் செய்திகள்