ராணுவத்துக்கு ஆதரவு தெரிவித்து.. சென்னையில் நாளை பேரணி.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

May 09, 2025,05:08 PM IST

சென்னை:  தீவிரவாதத்துக்கு எதிரான போரில் இறங்கியுள்ள இந்திய ராணுவத்துக்கு ஆதரவு தெரிவித்து சென்னையில் நாளை பேரணி நடத்தப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.


பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்திய படைகள், பாகிஸ்தானிலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் செயல்பட்டு வரும் தீவிரவாத முகாம்களை தாக்கி அழித்தன. தொடர்ந்தும் பாகிஸ்தான் தரப்புக்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கைகளில் ராணுவம் இறங்கியுள்ளது. இதனால் எல்லைப் புற மாநிலங்களில் பதட்டமான நிலை காணப்படுகிறது.


நமது படையினரின் தீரமான நடவடிக்கைக்கு நாடு முழுவதும் அனைத்து மக்களும் பேராதரவு கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழ்நாட்டிலும் ராணுவத்துக்கு ஆதரவு அளிக்கும் வகையில், தமிழ்நாடு ராணுவத்தின் போர் நடவடிக்கைகளில் உடன் இருக்கிறது என்பதைக் காட்டவும் சென்னையில் நாளை பேரணி நடத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.




இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், விரவாதத்தை வளர்த்தெடுத்து, தான் கெட்டதோடு இந்தியாவிலும் அத்துமீறல்களில் ஈடுபடுகிறது பாகிஸ்தான். நம்மைக் காக்க வீரத்துடன் போர் நடத்தும் இந்திய இராணுவத்தினருக்கு நம் ஆதரவை வெளிப்படுத்தும் நேரம் இது.


நாளை மாலை 5 மணிக்கு DGP அலுவலகத்தில் இருந்து தீவுத்திடல் போர் நினைவுச் சின்னம் வரை, எனது தலைமையில் முன்னாள் படைவீரர்கள், அமைச்சர் பெருமக்கள், பொதுமக்கள், மாணவர்கள் பங்குபெறும் பேரணி நடைபெறும். மக்கள் அனைவரும் பங்கேற்று நம் ஒற்றுமையையும் உறுதியையும் காட்டுவோம் என்று முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

2 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 09, 2025... இன்று நல்ல நேரம் தேடி வரும் ராசிக்காரர்கள்

news

Bharat Bandh: நாடு முழுவதும் 25 கோடித் தொழிலாளர்கள் ஸ்டிரைக்.. முடங்கும் முக்கிய சேவைகள்!

news

பாரத் பந்த்.. நாளை நாடு தழுவிய அளவில்.. தொழிற்சங்கங்களின் போராட்டம்.. பாதிப்பு வரமா?

news

அமெரிக்காவில் பெரும் சோகம்.. சுற்றுலா சென்ற இந்தியர், மனைவி, 2 பிள்ளைகளுடன் விபத்தில் சிக்கி பலி

news

வாய்க்கு வந்ததை வாக்குறுதி என அளித்துவிட்டு, மக்களையும் ஏமாற்றும் திமுக அரசு: எடப்பாடி பழனிச்சாமி!

news

21 நாட்களில் பணம் இரட்டிப்பு.. பெங்களூரைக் கலக்கிய கேரள தம்பதி தலைமறைவு.. அதி நவீன மோசடி!

news

பாமக செயற்குழு கூட்டம்: அன்புமணிக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றம்!

news

பள்ளி வேன் மீது ரயில் மோதி கோர விபத்து: ரயில்வே நிதியுதவி அறிவிப்பு!

news

Trump Taxes: அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த புதிய வரிகள்...எந்தெந்த நாடுகளுக்கு அதிக பாதிப்பு?

அதிகம் பார்க்கும் செய்திகள்