யார் யாரோ.. புதுசு புதுசா கட்சி தொடங்குபவன்லாம்.. டைமை வீணடிக்க விரும்பலை.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

Nov 04, 2024,06:10 PM IST

சென்னை: திமுக வளர்வது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. இன்றைக்கு யார் யாரோ வர்றவன்லாம், புதுசு புதுசா கட்சி தொடங்கிறவன்லாம் திமுக அழியனும்னு நினைக்கிறாங்க.. அவங்களுக்கெல்லாம் பதில் சொல்ல விரும்பல்லை, அவசியமும் இல்லை. டைமை வீணடிக்க விரும்பலை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடியாக பேசியுள்ளார்.

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியைத் தொடங்கியுள்ளார். விக்கிரவாண்டியில் அவர் நடத்திய முதல் மாநில மாநாடு இன்று வரை டாக் ஆப் தி ஸ்டேட்டாக உள்ளது. தொடர்ந்து அதை வைத்து விவாதங்கள் தொடர்கின்றன.

விஜய் கட்சி தொடர்பாகவும், மாநில மாநாட்டில் திமுகவை தனது கொள்கை எதிரி என்று அக்கட்சி அறிவித்தது தொடர்பாகவும் முதல்வர் மு.க.ஸ்டாலினோ துணை முதல்வர் உதயநிதி  ஸ்டாலினோ இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் தனது தொகுதியான சென்னை கொளத்தூரில் முதல்வர் இன்று முதல்வர் படைப்பகத்தைத் தொடங்கி வைத்தார். ரூ. 2.85 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட படைப்பகமானது, படிப்பு தளம், பணியாற்றும் தளம் மற்றும் உணவுத்தளம் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை உள்ளடக்கியதாக அமைக்கப்பட்டுள்ளது. 



இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசும்போது விஜய்யை மறைமுகமாக விமர்சித்துப் பதிலளித்தார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, இன்றைக்கு திமுக வளர்வது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. அதனால்தான் யார் யாரோ வர்றவன்லாம், புதுசு புதுசா கட்சி தொடங்குறவன்லாம் திமுக அழியனும்னு நினைக்கிறாங்க. நான் அவர்களை பணிவண்போடு கேட்டுக் கொள்கிறேன்.. இன்றைக்கு நான்காவது ஆண்டைத் தொடக் கூடிய நிலையில் இந்த ஆட்சி உள்ள நிலையில், இந்த ஆட்சி செய்துள்ள சாதனைகளை நினைத்துப் பாருங்கள். 

பேரறிஞர் அண்ணா சொல்வார், வாழ்க வசவாளர்கள். அதைத்தான் நான் சொல்ல முடியும். நாங்க இதைப் பற்றியெல்லாம் கவலையே படலை. எங்களது போக்கு மக்களுக்கு நல்லது செய்யக் கூடிய போக்கு. தேவையில்லாமல் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.. தேவையும் இல்லை. நேரத்தை வீணடிக்க விரும்பலை. மக்களுக்கு பணியாற்றவே எங்களுக்கு நேரம் போதவில்லை என்றார் முதல்வர்.

தவெக குறித்து முதல் முறையாக மறைமுகமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ள கருத்தை திமுகவினர் சமூக வலைதளங்களில் தீவிரமாக பரப்பி வருகின்றனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

டொனால்ட் டிரம்ப் அதிபரான பிறகு.. அமெரிக்காவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி அதிகரிப்பு!

news

ஆடிப் பெருக்கு சரி.. அந்த 18ம் எண்ணுக்கு எவ்வளவு விசேஷங்கள் இருக்கு தெரியுமா?

news

ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்.. காவிரிக் கரைகளில் விழாக்கோலம்.. தாலி மாற்றி பெண்கள் மகிழ்ச்சி!

news

விஜய்யின் காஸ்ட்லி மிஸ்.. ஓபிஎஸ்ஸை தவற விட்டது எப்படி?.. திமுகவின் மின்னல் வேக ஸ்கெட்ச்!

news

காமெடி நடிகர் மதன்பாப் மரணம்.. புற்றுநோயால் உயிர் பிரிந்தது.. திரையுலகினர் அஞ்சலி

news

இந்தியப் பொருளாதாரம் எப்படி இருக்கு.. டிரம்ப்புக்கு நோஸ் கட் கொடுத்த .. அமெரிக்க ஏஐ தளங்கள்!

news

11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

எத்தனைப் பேரின் உயிரை திமுக அரசு பறிக்கப் போகிறது என்று தெரியவில்லை: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

தந்தையை உளவு பார்த்த மகன்: டாக்டர் அன்புமணி ராமதாஸ் மீது குற்றச்சாட்டு வைத்த டாக்டர் ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்