ஏமாற்றம் இருக்காது, மாற்றம் உண்டு.. முதல்வர் மு.க.ஸ்டாலின் சூசகம்.. அப்ப உதயநிதி ஸ்டாலின் கன்பர்ம்?

Sep 24, 2024,08:52 PM IST

சென்னை:   அமைச்சரவை மாற்றம் தொடர்பான கேள்விக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பளிச்சென சொல்லியுள்ளார். மாற்றம் இருக்கும், ஏமாற்றம் இருக்காது என்று அவர் கூறியிருப்பது பல கேள்விகளுக்குப் பதிலாக அமைந்துள்ளதாக கருதப்படுகிறது.


முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் மாற்றம் வரப் போவதாக நீண்ட நாளாக பேச்சு அடிபட்டு வருகிறது. ஆனால் இதுவரை எந்த மாற்றமும் நடக்கவில்லை. குறிப்பாக உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக்கப்படுவாரா என்ற கேள்வி நீண்ட நாட்களாக கேட்கப்பட்டு வருகிறது.




தற்போது விளையாட்டுத்துறை அமைச்சராக உள்ள உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக்க வேண்டும் என்று திமுகவினர் கோரி வருகின்றனர். இதுதொடர்பாக அமெரிக்கா செல்வதற்கு முன்பு அளித்த ஒரு பேட்டியின்போது முதல்வர் கூறுகையில், கோரிக்கை வலுத்துள்ளது, இன்னும் பழுக்கவில்லை என்று கூறியிருந்தார். அவர் அமெரிக்காவுக்குப் போய் விட்டு வந்து விட்டார். இப்போதும் அமைச்சரவை மாற்றம் தொடர்பான கேள்விகள் வலுக்க ஆரம்பித்துள்ளன.


இன்று இதுதொடர்பாக சற்று தெளிவான பதிலைக் கொடுத்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இதனால் திமுகவினர் உற்சாகமாகியுள்ளனர். குறிப்பாக உதயநிதி ஸ்டாலின் ஆதரவாளர்கள் ஹேப்பி ஆகியுள்ளனர். முதல்வரிடம் இன்று செய்தியாளர்கள் அமைச்சரவை மாற்றம், துணை முதல்வர் நியமனம் குறித்து நீண்ட நாட்களாக பேசப்பட்டு வருகிறதே என்று கேட்டனர். அதற்கு முதல்வர் ஸ்டாலின் கூறுகையில், மாற்றம் இருக்கும், ஏமாற்றம் இருக்காது என்று பதிலளித்தார்.


இதன் மூலம் விரைவில் அமைச்சரவை மாற்றம் நடைபெறப் போகிறது என்பதை சூசகமாக முதல்வர் உணர்த்தியுள்ளார் என்று கருதப்படுகிறது. அதேபோல ஏமாற்றம் இருக்காது என்று அவர் கூறியிருப்பதால், உதயநிதி ஸ்டாலின் தொடர்பான எதிர்பார்ப்புகளில் ஏமாற்றம் இருக்காது என்று அர்த்தம் எடுத்துக் கொள்ளலாம். காரணம், அமைச்சரவை மாற்றமே உதயநிதியை மையமாக வைத்துத்தான் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. எனவே உதயநிதி ஸ்டாலின் விரைவில் அடுத்த கட்டத்துக்கு உயர்த்தப்படுவார் என்பது கிட்டத்த உறுதியாகியுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

news

அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!

news

விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!

news

தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்