சென்னை: காலை உணவுத் திட்டத்தின் விரிவாக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இது வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தருணம் என்று அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி அண்ணா பிறந்த நாளன்று, மதுரை ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் வரலாற்றுச் சிறப்புமிக்க காலை உணவுத் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்.
சட்டசபையில் அந்த ஆண்டு மே மாதம் 7ம் தேதி விதி எண் 110ன் கீழ் முதல்வர் ஒரு அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதன்படி, நகரப் பகுதிகளிலும், கிராமப் பகுதிகளிலும் பள்ளிக்கு செல்லக்கூடிய குழந்தைகள் காலையிலேயே புறப்பட்டு விடுவதால், பெரும்பாலான குழந்தைகள் காலை உணவு சாப்பிடுவது இல்லை என்ற தகவல் அரசுக்கு கிடைத்திருக்கிறது. பள்ளிகள் மிகத் தூரமாக இருப்பது மட்டுமல்ல, சிலருடைய குடும்ப சூழலும் இதற்குக் காரணமாக இருக்கிறது. இதனை மனதில் கொண்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை நாம் தீட்டி இருக்கிறோம்.
முதற்கட்டமாக சில மாநகராட்சி, நகராட்சிகளிலும், தொலைதூரக் கிராமங்களிலும் தமிழ்நாடு அரசின் இத்திட்டம் தொடங்கப்படும். ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலக்கூடிய தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு அனைத்துப் பள்ளி நாட்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும் என்று முதல்வர் தெரிவித்திருந்தார். அதன்படி இந்தத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில், ரூ.33.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 417 மாநகராட்சி பள்ளிகளில் 43,681 மாணவர்கள், 163 நகராட்சி பள்ளிகளில் 17,427 மாணவர்கள், 728 வட்டாரம் மற்றும் கிராம ஊராட்சி பள்ளிகளில் 42,826 மாணவர்கள், 237 தொலைதூர, மலைபிரதேச பள்ளிகளில் 10,161 மாணவர்கள், என மொத்தம் 1,545 பள்ளிகளில் தொடங்கப்பட்டு, 1,14,095 மாணவர்கள் பயன்பெற்று வந்தனர்.
இந்த நிலையில் தற்போது இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அதன்படி நகர்ப்புற உள்ளாட்சிப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகள் இதில் இணைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 2430 பள்ளிகளைச் சேர்ந்த 3 லட்சத்து 5 ஆயிரம் மாணவ மாணவியர் இதில் பயன்பெறுவார்கள். விரிவாக்கத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில் தொடங்கி வைத்தார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் முதல்வர் பேசும்போது, இந்த நாள் மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியான நாளாகும். குழந்தைகளுடன் இணைந்து சாப்பிட்டபோது எனக்கும் கூட எனர்ஜி வந்து விட்டது. நீங்கள் எல்லோரும் நன்றாகப் படித்து முன்னேறி தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குப் பணியாற்றினால் அதுதான் திட்டத்தின் உண்மையான வெற்றி. இந்தத் திட்டத்திற்காக ஆண்டுக்கு ரூ. 600 கோடி செலவிடப்படுகிறது. இதை செலவு என்று சொல்ல மாட்டேன். இது சிறப்பான சமூக முதலீடு என்றுதான் நான் சொல்வேன் என்றார்
கரூர் துயரம்: தவெக அறிவித்த ரூ.20 லட்சம் நிவராணம் 41 குடும்பத்தாரின் வங்கியில் செலுத்தப்பட்டது
ஆளுநர்களை வைத்துக் குழப்பம் விளைவித்து என்ன சாதிக்கப் போகிறீர்கள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
நீலகிரி, கோவைக்கு ஆரஞ்ச் அலர்ட்... சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்: வானிலை மையம்
ஜிஎஸ்டி வரி குறைப்பால் கார், ஏரி, டிவி விற்பனை அதிகரிப்பு: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
கரூர் துயரம் எதிரொலி.. தீபாவளி கொண்டாட வேண்டாம்.. தொண்டர்களுக்கு தவெக வேண்டுகோள்
எனது பெயரில் நற்பணி மன்றம் தொடங்க வேண்டாம்.. விட்ருங்க.. அண்ணாமலை கோரிக்கை
திமுக அரசுக்கு நிதி நிர்வாகமே தெரியவில்லை..பாமக கூறி வந்த குற்றச்சாட்டு உறுதியாகியுள்ளது: அன்புமணி
10 கிராம் தங்கத்தோட விலை என்ன தெரியுமா.. தீபாவளியையொட்டி வச்சு செய்யும் நகை விலை!
நிதீஷ் குமார் நிச்சயம் முதல்வராக மாட்டார்.. பாஜக முடிவெடுத்து விட்டது.. சொல்கிறது காங்கிரஸ்
{{comments.comment}}