முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய.. 40க்கு 40 தென்திசையின் தீர்ப்பு.. ஆவணப்படுத்தப்பட்ட தேர்தல் வெற்றி!

Aug 16, 2024,05:20 PM IST

சென்னை: முதல்வர் மு க ஸ்டாலின் எழுதிய தென் திசையின் தீர்ப்பு நூலை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டார். இந் நூலை திமுக பொருளாளர் டி ஆர் பாலு பெற்றுக்கொண்டார்.


மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளிலும் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியை தற்போது புத்தக வடிவில் கொண்டு வந்து ஆவணப்படுத்தியுள்ளது திமுக. இந்த நூலை முதல்வர் மு.க.ஸ்டாலினே எழுதியுள்ளார்.




முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில் திமுக மாவட்ட செயலாளர்கள், பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி ஆர் பாலு, முதன்மை செயலாளர் கே என் நேரு, தலைமை கழக நிர்வாகிகள் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.  அப்போது முதல்வர் மு க ஸ்டாலின் எழுதிய 40க்கு 40 தென்திசையின் தீர்ப்பு என்ற நூலை திமுக பொதுச்செயலாளர் துறைமுகன் வெளியிட்டார். இதனை டி ஆர் பாலு பெற்றுக் கொண்டார். 


இந்த நூலில் லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணி 40க்கு 40 என்ற அடிப்படையில் அனைத்து தொகுதிகளிலும் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த நிலையில் 40 தொகுதிகளிலும் தேர்தல் வியூகம் என்ன.. அது எப்படி சாத்தியமானது.. என்ற அடிப்படையில் 40க்கு 40 தென்திசை தீர்ப்பு நூலை முதல்வர் மு க ஸ்டாலின் எழுதியிருந்தார்.


முதல்வர் மு க ஸ்டாலின் வரும் 27ஆம் தேதி அமெரிக்க பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அதற்கு முன்னதாக திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது நினைவிருக்கலாம்.


இதுகுறித்து முதல்வர் மு க ஸ்டாலின் கூறியதாவது, சுணக்கமின்றி தொடர்ந்து செயல்பட்டால் அடுத்த முறையும் தமிழகத்தில் திமுக ஆட்சி தான் இருக்கும். மக்களுக்கு எண்ணற்ற நலத்திட்டங்களை அளித்திருக்கிறோம் அது வாக்குகளாக மாற்ற நம்முடைய களப் பணி என்பது மிகவும் அவசியம். திமுக வை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்ல வேண்டும். 2026 சட்டமன்றத் தேர்தல் லில் வெற்றி பெறுவது தான் நம்முடைய இலக்கு. அமெரிக்காவில் இருந்தாலும்  கட்சி மற்றும் ஆட்சியை கவனித்துக் கொண்டே தான் இருப்பேன் என பேசியுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சென்னையில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

news

ஜூன் 22.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் .. புதிய குடும்ப அட்டைகள் விநியோகிக்க திட்டம்!

news

பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை

news

தமிழக அரசு குதிரை பேரத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறது: கனிமொழி கடும் விமர்சனம்!

news

"இந்திரா காந்தி இருந்திருந்தால் பாஜக-விற்கு தடை விதித்திருப்பார்" - அசோக் கெலாட் சர்ச்சை பேச்சு

news

4 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்...அதிமுக மனு விசாரணைக்கு ஏற்பு

news

"எங்கே போனது சிங்கப்பெண் அதிரடிப் படை?" - எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்!

news

சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முதல்வர் அக்கறை காட்ட வேண்டும்! உதயநிதி ஸ்டாலின் காட்டம்

news

முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்