சென்னை: தமிழ்நாட்டில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி சமக்ரசிக்ஷா என்ற திட்டத்தின்கீழ் மத்திய அரசு வழங்கவேண்டிய நிலுவைத் தொகையினை உடனடியாக விடுவிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இந்தியாவில் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருந்தார். அதில் தமிழகத்திற்கான எந்த ஒரு திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கப்படவில்லை. இது தமிழக மக்களிடையே கடும் அதிர்ப்த்தியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சமீபத்தில் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்துக்கு (சமக்ரசிக்ஷா) ஒதுக்கப்பட்ட 4ம் தவணை நிதி ரூ.249 கோடியும், நடப்பு ஆண்டுக்கான நிதி ரூ.2,152 கோடியையும் ஒன்றிய அரசு விடுவிக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக குற்றம் சாட்டியிருந்தார்.
இதனையடுத்து, மும்மொழிகையை ஏற்றால்தான் தமிழகத்திற்கு நிதி ஒதுக்க முடியும். இல்லையென்றால் தமிழகத்திற்கு நிதி கிடையாது என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியிருந்தார். இதனால் பலரும் தர்மேந்திர பிரதான் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வந்தனர். அதே சமயத்தில் மும்மொழி கொள்கையை ஏற்க முடியாது. தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கை மட்டுமே பின்பற்றப்படும் எனவும் திட்டவட்டமாக தமிழ்நாடு அரசு கூறி வருகிறது.
இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் சமக்ரசிக்ஷா திட்டத்தின் கீழ் 2,152 கோடி நிதியை விடுவிக்க வேண்டும் எனவும், இரு மொழிக் கொள்கையில் மாற்றம் கொண்டு வருவது தமிழ்நாட்டு மக்களுக்கு பயன் அளிக்காது எனவும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையிலும் லட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதியும் தமிழ்நாட்டிற்கு சமக்ரக்ஷா திட்டத்தின் கீழ் வரவேண்டிய நிதியினை ஒன்றிய அரசு உடனடியாக விடுவித்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தியும், மாண்புமிகு இந்திய பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க ஸ்டாலின் அவர்கள் இன்று (20.2.2025) கடிதம் எழுதி உள்ளார்.
அக்கடிதத்தில் தேசிய கல்விக் கொள்கை 2020 ஐ முழுமையாக அமல்படுத்தி மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை, தமிழ்நாட்டிற்கான சமக்ரசிக்ஷா திட்டத்தின் கீழ் நிதி விடுவிக்கப்பட மாட்டாது என்று மாண்புமிகு ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் அவர்கள் சமீபத்தில் தெரிவித்திருப்பது குறித்து தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இது தமிழ்நாட்டில் உள்ள மாணவர்கள் அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெருத்த கவலையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் கல்வி மற்றும் சமூக சூழலில் இரு மொழிக் கொள்கையானது நீண்ட காலமாக ஆழமாக வேரூன்றியுள்ளதாகவும், அதனை பின்பற்றுவதில் தமிழ்நாடு எப்பொழுதும் உறுதியாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அலுவல் மொழிகள் விதி 1976 இல் குறிப்பிட்டுள்ள படி அலுவல் மொழிச் சட்டம் 1963 ஐச் செயல்படுத்துவதில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தனது கடிதத்தில் சுட்டிக்காட்டி உள்ளார்.
நவோதயா வித்யாலயா போன்ற ஒன்றிய அரசு பள்ளிகள் மும்மொழிக் கொள்கையை பின்பற்றுவதால் தான் தமிழ்நாட்டில் அவை நிறுவப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இந்த இரு மொழிக் கொள்கை மற்றும் சமூக நீதியின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட முற்போக்கு கொள்கைகளின் காரணமாக கடந்த அரை நூற்றாண்டில் தமிழ்நாடு அடைந்துள்ள மகத்தான முன்னேற்றங்கள் மற்றும் அதற்கு வித்திடும் முன்முயற்சிகளைக் காண முடிகிறது எனவும், எங்கள் இருமொழிக் கொள்கையில் எந்தவொரு மாற்றமும் கொண்டுவர உத்தேசிப்பது தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் பெரிய அளவில் பயனளிக்காது என்பதை மேலே உள்ளவை தெளிவாக எடுத்துக்காட்டுவதாகவும் சுட்டிக் காட்டியுள்ளார்.
ஓய்வு பெற்ற எஸ்ஐ ஜாகிர் உசேன் கொலை வழக்கு.. யாரும் தப்ப முடியாது.. முதல்வர் மு க ஸ்டாலின்
வெயிலுக்கு ஒரு குட்டி பிரேக்.. தமிழ்நாட்டில் இன்று முதல் 25ஆம் தேதி வரை.. மிதமான மழைக்கு வாய்ப்பு..!
Chennai corporation budget: ரூ.5,145.52 கோடி பட்ஜெட்.. மேயர் பிரியா வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்!
பொது இடங்களில் உள்ள திமுக கொடிக் கம்பங்களை உடனடியாக அகற்றுங்கள்.. அமைச்சர் துரைமுருகன் உத்தரவு
நண்பா நீ விளையாடு.. நான் அம்பயரிங் பண்றேன்.. IPL Umpire ஆன விராட் கோலியின் டீம் மேட்!
அரசு ஊழியர்கள்- ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுங்க: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்!
Chennai MTC.. ஏசி பஸ் உட்பட அனைத்து பேருந்துகளிலும்.. இனி ரூ.2000/- மாதாந்திர சலுகை பாஸ்!
தெரு நாய்களை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை .. மேயர் பிரியாவுக்கு கார்த்தி சிதம்பரம் கோரிக்கை
முடிந்தது 9 மாத தவிப்பு.. தரையிறங்கிய டிராகன்.. புன்னகையுடன் பூமிக்குத் திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்
{{comments.comment}}