திருநெல்வேலி அல்வா இல்லை.. மத்திய அரசு கொடுக்கும் அல்வா தான் ரொம்ப ஃபேமஸ்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

Feb 07, 2025,01:31 PM IST

திருநெல்வேலி: திருநெல்வேலி அல்வா ஃபேமஸ் இல்லை... மத்திய அரசு கொடுக்கும் அல்வா தான் ஃபேமஸ் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக நேற்று நெல்லை வந்தார். கங்கைகொண்டான், சிப்காட் தொழில் பூங்காவில் டாடா நிறுவனத்தின் சூரிய மின் உற்பத்தி ஆலையை தொடங்கி வைத்தார். தொடர்ந்து இன்று திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு ரூ. 180 கோடி மதிப்பிலான புறவழிச்சாலை திட்டம் உட்பட 23 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார். 


மேலும் 20 புதிய திட்டப் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினர். நெல்லை மாவட்டத்திற்கு பல்வேறு அறிவிப்புகளையும் வெளியிட்டார்.  இதனையடுத்து விழாவில் முதல்வர் பேசுகையில் கூறியதாவது:




தாமிரபரணி ஆற்றின் வெள்ள நீரை வறண்ட இடங்களான திசையன்விளை, சாத்தான்குளம் பகுதிக்கு கொண்டு செல்லும் திட்டம், இரண்டு ஆண்டுகளாக வெள்ளோட்டம் பார்க்கப்பட்டு இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெருக்கடியைக் குறைக்கப் புதிய புறவழிச் சாலைக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. பொருநை ஆற்றின் கரையில் 3,200 ஆண்டுகளுக்கு முன்பு நெல் பயிரிடப்பட்டுள்ளதற்கான ஆதாரங்கள் அகழ்வாய்வில் கிடைத்துள்ளன. 


நெல்லையில் மேலும் இரண்டு புதிய சிப்காட் தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும். பாளையங்கோட்டையில் ஒய் வடிவ ரயில்வே மேம்பாலம், தாமிரபரணியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும். பாபநாச கோயில் வளாகத்தில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். மேலப்பாளையம் பகுதியில் அம்பாசமுத்திரம் சாலை நான்கு வழி சாலை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. 


திருநெல்வேலி அல்வாவுக்குப் புகழ் பெற்றது. ஆனால், திருநெல்வேலி அல்வாவை விட மாநிலங்களுக்கு மத்திய அரசு தரும் அல்வா தான் ஃபேமஸாக இருக்கிறது. நெல்லையில் மழை வெள்ள பாதிப்புக்காக ஒன்றிய அரசிடம் நிவாரணம் கேட்டும், இடைக்கால நிதி உதவி கூட ஒன்றிய அரசு தரவில்லை. நிவாரணம் வழங்காததை கண்டித்தோம். அப்போதும் ஒன்றிய அரசு தரவில்லை. நீதிமன்றம் சென்ற பிறகுதான் ஒன்றிய அரசு ரூபாய் 276 கோடி வழங்கியது. மழை வெள்ள நிவாரணமாக தமிழ்நாடு அரசு கேட்ட 37,907 கோடியில் ஒரு சதவீத நிதி கூட ஒன்றிய அரசு  வழங்கவில்லை.


தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது. ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை. இந்திய வரைபடத்தில் மட்டும் தமிழ்நாடு இருந்தால் போதுமா? பாஜக ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் ஒன்றிய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வாக்கு கேட்க மட்டும் தமிழ்நாட்டுக்கு வந்தால் போதும் என்று நினைக்கிறார்களா?. 


தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் நம் மீது அவதூறு அள்ளி வீசுகின்றனர். மக்களுக்கு நன்மை இருந்தால் விமர்சனங்களை ஏற்றுக்கொள்வேன். சமூக வலைதளங்களில் ஒவ்வொரு செய்தியையும் திரித்து வருகின்றன. தமிழ்நாட்டின் வளர்ச்சியை எப்படி கெடுக்கலாம் என்று யோசிக்கின்றனர். உண்மையான வரலாற்றை திராவிட மாடல் அரசு தோண்டி எடுப்பது அவர்களுக்கு பிடிக்கவில்லை. திமுகவுக்கு பக்க பலமாக மக்கள் இருப்பார்கள் என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சவுக்கு சங்கர் வீட்டில் கழிவுகளைக் கொட்டி ஆவேச போராட்டம்.. எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்!

news

குதிரைவாலி அரிசி-பாசி பருப்பு பொங்கல் .. மா இஞ்சி மல்லித்தழை சட்னி சேர்த்து சாப்பிட்டால் சூப்பரப்பு!

news

திமுகவில் இருப்பவர்கள் சிறைக்கு அஞ்சாத சிங்கங்கள் : அமைச்சர் சேகர்பாபு

news

தொகுதி மறுசீரமைப்பு விழிப்புணர்வு தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

பிரபல இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ், சைந்தவி தம்பதி.. ஓரே காரில் வந்து பரஸ்பர விவாகரத்து மனு தாக்கல்

news

பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள..துணைவேந்தர் பணியிடங்களை நிரப்புக.. டாக்டர் ராமதாஸ் கோரிக்கை!

news

கோயம்பேட்டில் காய்களின் வரத்து அதிகரிப்பு..முருங்கைக்காய் விலை 10 மடங்கு வீழ்ச்சி.. விவசாயிகள் கவலை!

news

Today gold rate:தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை... என்ன காரணம் தெரியுமா?

news

Mumbai Indians.. என்ன கொடுமை சார் இது.. 13 வருஷமா இப்படியே நடந்திட்டிருந்தா எப்படி சார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்