₹ போய் ரூ வந்தது.. தமிழ்நாடு பட்ஜெட்டின் இலச்சினையை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Mar 13, 2025,07:12 PM IST
சென்னை: எல்லார்க்கும் எல்லாம் என்ற வாசகத்துடன் 2025-26ம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு பட்ஜெட்டின் இலச்சினையை வெளியிட்டுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

தமிழகத்தின் 2024-25ம் ஆண்டிற்கான பட்ஜெட் சட்டசபையில் நாளை (மார்ச்14) தாக்கல் செய்யப்பட உள்ளது. நாளை காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவையில் 2025-26ம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யவுள்ளார். தமிழ்நாடு அரசின் இந்த பட்ஜெட்டில் மக்களை கவரும் வகையில் பல்வேறு திட்டங்கள் இடம் பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பட்ஜெட் தாக்கல் முடிந்ததும், அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெறுகிறது.



நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், எல்லார்க்கும் எல்லாம் என்ற தலைப்பில், மக்களுக்கு அரசு வழங்கிய நலத்திட்டங்கள் தொடர்பான வீடியோ ஒன்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில் பட்ஜெட் தமிழகத்தின் வளர்ச்சியை உறுதி செய்யும் எனவும்  முதல்வர் வெளியிட்ட விடியோவில் இடம்பெற்றுள்ளது.

2025-26ம் நிதி ஆண்டிற்கான தமிழ்நாடு பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், தமிழ்நாடு பட்ஜெட்டில் ரூபாயைக் குறிக்கும் தேவநாகரி எழுத்துருவான ₹ குறியீட்டிற்கு பதில், தமிழ் எழுத்தான ரூ வை முன்னிலைப்படுத்தும் வகையில்  அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

போகிப் பண்டிகை.. வரலாறும் பண்பாடும்!

news

தம்பி அண்ணாமலைக்கு.. தமிழ் இனத்தின் மகனாக நாங்கள் துணை நிற்போம்.. சீமான்

news

அதிகாலையில் விழிப்பவரும்.. இளமையில் உழைப்பவரும்... முதுமைக்கு முன் சேமிப்பவரும்!

news

சிரஞ்ஜீவி படத்திற்கு எதிராக இளையராஜா வழக்கா? டைரக்டர் விளக்கம்

news

லீக்கான கூட்டணி பிளான்...நெருக்கடியில் டிடிவி தினகரன்

news

அதிமுக நேர்காணல்...சென்னை நிர்வாகிகளை வறுத்தெடுத்த இபிஎஸ்

news

பொங்கல் பண்டிகை...சிறப்புப் பேருந்துகளில் இதுவரை 6.05 லட்சம் பேர் பயணம்

news

ராகுல் காந்தியின் ‘ஜனநாயகன்’ ஆதரவு ட்வீட்: உறுதியாகிறதா காங்கிரஸ்-தவெக கூட்டணி?

news

பிரதமர் நரேந்திர மோடியின் மதுரை பொதுக்கூட்டம்... திடீர் என சென்னைக்கு மாற்றம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்