சென்னை: 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்காக ஒவ்வொரு கட்சிகளும் தனது தனித்துவமான கட்டமைப்புகளை வலுப்படுத்தி வருவதால் அரசியல் களம் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் செல்கிறது. தற்போது போட்டியானது நான்கு கூட்டணிகளாக மாறியிருப்பது விறுவிறுப்பைக் கூட்டியுள்ளது.
தமிழ்நாட்டில் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில் அதிமுக மீண்டும் பாஜகவுடன் கைகோர்த்துள்ளது. அதிமுக-பாஜக இடையே மீண்டும் கூட்டணி அமைந்தால் தமிழ்நாட்டில் நான்கு முனை போட்டியாக இது மாறியுள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக கூட்டணி, அதிமுக பாஜக கூட்டணி, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவியது. இதில் திமுக பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்றது. 10 ஆண்டுகளாக இழந்திருந்த ஆட்சியை திமுக கைப்பற்றியது. அதிமுக ஆட்சியைப் பறி கொடுத்து எதிர்க்கட்சியானது. பாஜகவுக்கு நான்கு தொகுதிகளில் மட்டும் வெற்றி கிடைத்தது. மக்கள் நீதி மய்யம் பெரும் தோல்வியைத் தழுவியது. நாம் தமிழர் கட்சி வழக்கம் போல தோற்றது.
இந்த நிலையில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 5 முனை போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்பட்டது. திமுக, அதிமுக, பாஜக கூட்டணிகள் தவிர விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் ஆகியவை கடும் போட்டா போட்டியில் குதிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது அதிமுக - பாஜக கை கோர்த்திருப்பதால், 4 முனை போட்டியாக இது மாறியுள்ளது.

மறுபக்கம் கடந்த சட்டசபைத் தேர்தலில் கடும் போட்டியைக் கொடுத்த மக்கள் நீதி மய்யம் தற்போது திமுக கூட்டணியில் இடம் பிடித்துள்ளது. அந்த இடத்தை விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் பிடித்துள்ளது. அதேசமயம், மீதமுள்ள பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளின் நிலைப்பாடு என்ன என்பது தெரியாமல் கேள்விக்குறியாக உள்ளது. தேமுதிக ஏற்கனவே அதிமுக கூட்டணியில் உள்ளது. ஆனால் தற்போது அதிமுக பாஜகவுடன் கூட்டணியில் இணைந்துள்ளதால் தேமுதிக, அதிமுக பாஜக கூட்டணிக்குள் இணைத்துக் கொள்வார்களா அல்லது தனித்து விடப்படுமா என்பது தெரியவில்லை.
அதேபோல் பாமக, பாஜக கூட்டணியில் இணைந்திருந்தது. ஆனால் நேற்று சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க பாமக சார்பில் யாரும் செல்லவில்லை. பாமகவில் ஏற்கனவே உட்கட்சிப் பூசல் நிலவிவருகிறது. இதனால் தேமுதிக பாமகவின் அடுத்த நகர்வு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஒரு வேளை இவர்கள் இருவருமே திமுக கூட்டணிக்குப் போவார்களா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. அப்படிப் போனால் அங்கு இவர்களுக்கு கேட்கும் இடம் கிடைக்குமா என்பதும் கேள்விக்குறி. அதேசமயம், இவர்களை பாஜக போக விடாமல் தக்க வைக்க முயலும் என்றும் பேசப்படுகிறது.
ஆக மொத்தத்தில் வரப்போகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் அரசியல் வட்டாரத்தில் கடும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. ஒவ்வொரு கட்சிகளும் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் இப்பொழுதிருந்தே செயல்பட்டு வருகின்றனர். முன்னதாக தேர்தல் என்றால் மூன்று மாதம் முன்பு தான் ஒவ்வொரு கட்சிகளும் தங்களின் கட்சியை வலுப்படுத்துவதற்கான பணிகளை செய்து வரும்.

ஆனால் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வர இன்னும் ஓராண்டு இருக்கும் நிலையிலும் கூட கூட்டணி கட்சிகள் தனது கட்சியின் நிலைப்பாடு குறித்தும், கொள்கை குறித்தும் அறிவித்து வருகிறது. இதற்காக பல்வேறு வியூகங்களையும் அமைத்து வருகிறது.
இதனால் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தமிழக மக்கள் அனைவராலும் உற்று நோக்கப்படுகிறது. ஏனெனில் விஜய்யின் தாக்கம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. சீமானின் வேகமான வளர்ச்சியும் கணக்கில் கொள்ளப்பட வேண்டியுள்ளது. ஆட்சி மாற்றம் ஏற்படுமா.. அதே ஆட்சி நீடிக்குமா.. எந்த கட்சி தோல்வியை சந்திக்கும்.. என்ற எதிர்பார்ப்பு இப்பொழுதே எழுந்து வருகிறது. மறுபக்கம் இதற்கான கருத்துக்கணிப்புகளும் உலா வர ஆரம்பித்து விட்டன. இப்படி அரசியல் களம் நாளுக்கு நாள் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் கூடிக் கொண்டே செல்கிறது. நாமளும் பொறுத்திருந்து பார்ப்போம்..!
கே.ஏ. செங்கோட்டையன் நீக்கம்.. எம்ஜிஆரின் ஆரம்ப கால தொண்டர்.. 50 ஆண்டு கால அதிமுக அடையாளம்!
ஒரே நேரத்தில் உருவான இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் – சென்னை வானிலை தகவல்!
தனது கண்ணியத்தை இழக்கும் வகையில் பேசுகிறார் பிரதமர் மோடி.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
பிரதமர் குற்றம் சாட்டியது திமுகவை தான்... தமிழர்களை அல்ல: தமிழிசை சவுந்தர் ராஜன் பேட்டி!
தமிழர்களை எதிரியாகச் சித்தரித்து வெறுப்புவாத அரசியல் செய்வது பாஜகவின் வாடிக்கை: கனிமொழி
SIR திட்டத்தை எதிர்த்து.. திமுக கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டம்.. விஜய் செல்வாரா?
குப்பைமேடாக மாறும் சின்னக்காளி பாளையம்.. திமுக அரசு திட்டத்தை கைவிட வேண்டும்: அண்ணாமலை
ரூ.3,250 கோடி ஒப்பந்தம்... தமிழ்நாட்டில் மீண்டும் உற்பத்தியை தொடங்குகிறது ஃபோர்டு!
இரும்புப் பெண் இந்திரா காந்தி.. இன்னும் சில பத்தாண்டுகள் இருந்திருந்தால்.. இந்தியா எப்போதோ வல்லரசு!
{{comments.comment}}