கோயம்பத்தூர்: எந்த முன்னறிவிப்பும் இன்றி பொது இடத்தில் பிரியாணி சாப்பிடும் போட்டியை நடத்தியதால் ஹோட்டல் உரிமையாளர் கணேஷ் மீது கோவை காவல்துறை வழக்கு தொடர்ந்துள்ளது.
நம் நாட்டில் பல்வேறு வகை வகையான விதவிதமான உணவுகள் இருந்தாலும் கூட பிரியாணி என்று சொன்னாலே நம் நாவில் எச்சில் ஊறும். அந்த அளவிற்கு நாம் அனைவரும் அதற்கு அடிமைதான். அதிலும் அசைவ பிரியர்களுக்கு பிரியாணி அமிர்தம். அப்படிப்பட்ட கம கம பிரியாணியை சாப்பிட்டால் கூடவே ஒரு லட்சம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பை யார் தான் விட்டு வைப்பார்கள்.
கோவையில் உள்ள ஒரு ஹோட்டல் வித்தியாசமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது ரயில் பெட்டிகளுடன் ரயில்வே ஸ்டேஷன் போன்ற வடிவில் அமைந்துள்ளது. இந்த ஹோட்டல் மக்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆர்வத்தை மேலும் தூண்டும் வகையில் ஹோட்டல் உரிமையாளர் கணேஷ் என்பவர் ஒரு சூப்பர் ஆபரை வெளியிட்டார்.
அதன்படி இந்த ஹோட்டலில் தொடர்ந்து ஆறு பிரியாணி சாப்பிடும் நபருக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும். அதேபோல் நான்கு பிரியாணி சாப்பிட்டால் 50 ஆயிரம் பரிசுத் தொகையும், மூன்று பிரியாணி சாப்பிட்டால் 25 ஆயிரம் பரிசுத் தொகையும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த ஆஃபரை பிரியாணி பிரியர்கள் சும்மா விடுவார்களா. ஒரு பிடி பிடித்து அந்த பரிசு தொகையை தட்டிச் செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில் முந்தி அடித்துக்கொண்டு ஹோட்டலுக்குள் நுழைந்தனர். இந்தப் போட்டி மதியம் ஒரு மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நேரம் ஆக ஆக கூட்ட நெரிசல் அலை மோதியதால் இந்த போட்டி இரவு வரை நீடிக்கப்பட்டிருந்தது. இந்தப் போட்டியால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
அரசு மருத்துவமனை, ரயில் நிலையம், மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் போன்றவை இணைக்க கூடிய சாலையில் பொது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் காவல் ஆய்வாளர் அர்ஜுன் குமார், எந்த முன்னறிவிப்பும் இன்றியும் அனுமதி பெறாமல் பொது இடத்தில் மக்களைக் கூட்டி போக்குவரத்திற்கு இடையூறு செய்ததாக உணவகத்தின் மேலாளர் கணேஷ் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.
பிரியாணி சாப்பிட வந்த ஒருவர் மூன்று பிரியாணி சாப்பிட்டு இரண்டாவது இடத்தைப் பிடித்து 50,000 பரிசு தொகையை தட்டிச் சென்றார். அவர் தனது ஆட்டிசம் பாதித்த குழந்தையின் மருத்துவச் செலவைக்காக இதில் கலந்துகொண்டதாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}