பெங்களூரு: 6 டிரங்கு பெட்டிகளுடன் வந்து முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நகைகளை பெற்று கொள்ளுங்கள் என்று கர்நாடக சிறப்பு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
1996ம் ஆண்டு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து 28 கிலோ தங்கம், 800 கிலோ வெள்ளி, வைர நகைகள்,11,344 விலை உயர்ந்த பட்டுப்புடவைகள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவ்வழக்கு விசாரணை பெங்களூரு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்ததால் பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து பொருட்களும் பெங்களூரு கருவூலத்தில் வைக்கப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையில் இருந்த போது, 2016ம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் காலமானார். அவர் குற்றவாளி என உயர்நீதிமன்றம் உறுதி செய்த நிலையில், நகைகள் பெங்களூரில் உள்ள கருவூலத்தில் தான் இருந்தது. இந்நிலையில், பெங்களூரு சிறப்பு நீதி மன்றத்தில் சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி என்பவர், ஜெயலலிதாவின் நகைகளை ஏலம் விட வேண்டும் என்றும், அதில் கிடைக்கும் பணத்தில் நலத்திட்ட உதவிகள் செய்ய வேண்டும் என்று வழக்கு தொடுத்திருந்தார்.
இவரை அடுத்து ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா தனக்கு இதில் உரிமை உண்டு எனவும், நகைகளை தன்னிடம் வழங்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், இந்த நகைகளை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க சிறப்பு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: கர்நாடக அரசின் செயலர் மற்றும் போலீஸ் அதிகாரி மேற்பார்வையில் தமிழக அரசின் உள்துறை செயலாளர் மற்றும் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநரிடம் வழங்க வேண்டும். இந்த நகைகளை சரிப்பார்த்து பெற்றுக்கொள்ள தமிழக அரசு கூடுதலாக அதிகாரி ஒருவரையும் நியமிக்க வேண்டும்.
6 டிரங்கு பெட்டிகள், வீடியோ மற்றும் புகைப்பட கலைஞர்களையும் தயார் செய்து வர வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கை நடத்திய செலவினங்களுக்காக கர்நாடக அரசுக்கு தமிழக அரசு ரூ.5 கோடி வழங்க வேண்டும். வரும் மார்ச் 6 மற்றும் 7ம் தேதிகளில் தமிழக அரசிடம் ஜெயலலிதாவின் நகைகளை ஒப்படைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து ஜெயலலிதாவின் நகைகள், தமிழ்நாட்டுக்கு வரவுள்ளன. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
{{comments.comment}}