டெல்லி: சென்னையில் வணிக சிலிண்டரின் விலை ஏற்கனவே ரூபாய் 1965-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூபாய் 43.50 விலை குறைந்து, ரூ.1921 ஆக விற்பனையாகிறது.
இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சந்தைப்படுத்தும் வணிக சிலிண்டர்களின் விலையை தீர்மானிக்கின்றன. அதன்படி சிலிண்டர்களின் பயன்பாடுகளைப் பொறுத்து ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் எல்பிஜி சிலிண்டரின் விலை மாற்றம் செய்யப்படுகிறது. 2025ம் ஆண்டு புத்தாண்டை முன்னிட்டு அரசு எண்ணெய் சந்தை நிறுவனங்கள் சிலிண்டர் விலையை குறைத்து. வணிக பயன்பாட்டிற்கான சமையல் சிலிண்டர் விலை ரூ.14.50 குறைத்து , ரூ.1966-க்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டது. அதே சமயத்தில் வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து கடந்த மார்ச் 20 ஆம் தேதி வீட்டு உபயோக சிலிண்டருக்கு இந்திய எண்ணெய் நிறுவனம் கட்டுப்பாடுகளை விதித்தது. அதாவது ஒரு வீட்டில் 15 சிலிண்டர்கள் மட்டும் முன்பதிவு செய்ய முடியும். 14.20 கிலோ பயன்படுத்தி விட்டு அதற்கு மேல் தேவைப்பட்டால் அதற்கான உரிய காரணத்தை கடிதமாக தந்த பிறகு தான் கூடுதல் சிலிண்டர்கள் பெற முடியும் என அறிவித்திருந்தது.

இந்த நிலையில் இன்று ஏப்ரல் ஒன்று புது கணக்குகள் தொடங்கப்படும் நிலையில், வணிக சிலிண்டர்களின் விலை மீண்டும் குறைந்துள்ளன.
சென்னையில் கடந்த மாதம் வரை ரூபாய் 1965 க்கு விற்கப்பட்டு வந்த வணிக சிலிண்டரின் விலை, தற்போது ரூபாய் 43.50 குறைந்து, ரூ. 1921 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதே சமயத்தில் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இன்றி ரூபாய் 818க்கு விற்பனையாகிறது.
திமுக, அதிமுக, பாஜக கூட்டணி... வீரமணி விவகாரத்தில் ஸ்டாலினுக்கு கேள்வி.. முதல்வர் விஜய் விளாசல்
மதுராந்தகம் இடைத்தேர்தல் 2026 பிரச்சாரம்.. முதல்வர் விஜய் பேச்சு எப்படி இருந்தது?
Good Evening Friends: மாலை நேர ஸ்நாக்ஸ் 'மொறு மொறு துணுக்கு'!
தை பொறந்தது அத்தை அத்தை.. உந்தன் மடி என்றும் மெத்தை மெத்தை!
என்னைப் பார் யோகம் வரும்.. கழுதைக்கும் யோகத்துக்கும் என்னங்க சம்பந்தம்?
தேர்தல் கமிஷனர் பதவி விலகாவிட்டால் அக்., 2 முதல் நாடு தழுவிய போராட்டம்: கரப்பான் ஜனதா கட்சி Warning!
Puzzle: அந்தாதி வினா விடை.. வர்றீங்களா விளையாடலாம்?
Nellai Special: வாழை இலை விருந்தும்.. நாவில் கரையும் திருநெல்வேலி சொதிக்குழம்பும்!
ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: விசாரணைக்காக சிறப்பு புலனாய்வு குழு (SIT) அமைப்பு
{{comments.comment}}