- ஸ்வர்ணலட்சுமி
நம் உணவுகளில் அனைத்து சமையல்களிலும் சாம்பார், பொரியல் ,கூட்டு போன்றவற்றில் தாளிக்க மிக முக்கியமாக பயன்படுத்தப்படும் கருவேப்பிலையை உட்கொள்கிறோமா!.. என்றால் இல்லை .அதனை உணவில் இருந்து எடுத்து ஒரு பக்கம் வைத்து விட்டு தான் உண்கிறோம். ஒரு கூற்று ஒன்று இருக்கிறது "என்னை கருவேப்பிலை போன்ற அனைத்திற்கும் பயன்படுத்திக் கொண்டு தூர எறிந்து விடுவீர்கள்" என்பதை கேள்விப்பட்டிருக்கிறோம். அதுபோல எல்லா உணவிலும் பயன்படும் கருவேப்பிலை முழுமையாக நம் உடலுக்கு நன்மை பயக்கும் கருவேப்பிலையை வாரம் ஒரு முறை அல்லது இருமுறை சாப்பிட அதீத நன்மை பயக்கும்.
சரி இப்ப லஞ்ச் பாக்ஸ் ரெசிபியைப் பார்ப்போமா.. கம கம கறிவேப்பிலை சட்டினி எளிமையாகவும், விரைவாகவும் எப்படி? செய்யலாம் என்று பார்க்கலாம்... வாருங்கள்... கிச்சனுக்குள் போகலாம்.
தேவையான பொருட்கள்:
1. கருவேப்பிலை ஒரு கப் நிறைய (நன்றாக கழுவி வைக்கவும்)
2. கடலைப்பருப்பு உளுத்தம் பருப்பு தலா ஒரு ஸ்பூன்
3.வர மிளகாய் மூன்று (தேவைக்கு ஏற்ப)
4. சீரகம் அரை ஸ்பூன்
5.பெருங்காயத்தூள் -1/4ஸ்பூன்
6. தேங்காய் துருவல் - 4 ஸ்பூன்
7.பெரிய நெல்லிக்காய் ஒன்று
8. உப்பு தேவைக்கு ஏற்ப
9. நல்லெண்ணெய் இரண்டு ஸ்பூன்
10. பூண்டு ஆறு பல்
(குறிப்பு : புளிப்பு அதிகம் விரும்புபவர்கள் புளி பயன்படுத்தலாம்)
செய்முறை:
1. ஒரு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் கடலைப்பருப்பு உளுத்தம் பருப்பு போட்டு வறுக்கவும்.
2. பிறகு பூண்டு, சீரகம், வரமிளகாய் ஒன்றன்பின் ஒன்றாக சேர்க்கவும்.
3. அடுப்பை சிம்மில் வைத்து கழுவிய கருவேப்பிலை சேர்க்கவும்
4. பெருங்காயத்தூள் சேர்க்கவும்
5. லேசாக வதக்கவும் . கருவேப்பிலையின் பச்சை நிறம் அப்படியே இருக்க வேண்டும்
6. அடுப்பை அணைத்துவிட்டு தேங்காய் துருவல் சேர்க்கவும். பெரிய நெல்லிக்காய் கட் செய்து சேர்க்கவும்.
7. இவை சூடு நன்றாக ஆறிய பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி நைசாக அரைக்கவும்.
8. உப்பு தேவைக்கு ஏற்ப சேர்த்துக் கொள்ளவும்.
அருமையான கமகமவென கருவேப்பிலை சட்னி தயார் .இது சூடான சாதத்திற்கும் ,இட்லி தோசைக்கும் நெய் விட்டு சாப்பிட அருமையாக இருக்கும். வேலைக்கு செல்பவர்கள் லஞ்ச் பாக்ஸில் பேக் செய்து கொள்ள கருவேப்பிலை வதக்கும் போதே சிறிது புளி சேர்த்துக் கொள்ளலாம்.
இந்த கம கம காரசார கருவேப்பிலை சட்னி செய்து பாருங்கள். மேலும் இதுபோன்ற ரெசிபிகளுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென்தமிழுடன். உங்கள் ஸ்வர்ணலட்சுமி.
8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்... 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்... வானிலை மையம் எச்சரிக்கை!
தீவிரம் அடைந்து வரும் வடகிழக்கு பருவமழை... முதல்வர் முக ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோனை!
பெங்களூரு - ஓசூர் மெட்ரோ இணைப்புத் திட்டம் சாத்தியமில்லை: மெட்ரோ நிர்வாகம்
மகளிர் இலவசப் பஸ்களை விமர்சிக்காதீங்க.. என்னெல்லாம் நடக்குது தெரியுமா.. கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
தீபாவளியன்று குறைந்திருந்த தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு....சவரனுக்கு ரூ.2,080 உயர்வு!
காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் எதிரொலி.. சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மழை!
தீபாவளியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கடிதம்!
உழவர்களுக்கு இந்த தீபாவளி இருளாகத்தான் இருந்தது.. கொல்லாமல் கொல்லுகிறது திமுக அரசு:அன்புமணி
சித்திரையும் வெயிலும்!
{{comments.comment}}