- மீனா
சென்னை: பிக் பாஸ் வீட்டில் அவர் பாட்டுக்கு ஜாலியா நடமாடிட்டிருக்கார்.. அவரையே கொந்தளிக்க வச்சுட்டாங்க இன்னிக்கு.. யாரைச் சொல்றீங்க.. அட, நம்ம கூல் சுரேஷைத்தான்.
விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில் இன்றைய முதல் புரமோவில் ஒரு பரபரப்பான காட்சி அரங்கேறியது. அந்தக் காட்சியில் மொத்தப் பேரும் சேர்ந்து கூல் சுரேஷ் பக்கம் கையைக் காட்டி கடுகடுப்பை ஏற்ற, கொந்தளித்துப் போனார் சுரேஷ்.
மேட்டர் என்ன தெரியுமா.. இதோ இதுதான்!
பிக் பாஸ் இடம் இருந்து வந்த ஒரு அறிக்கையை ரவீனா வாசிக்கிறார். அப்போது, "ஒரு சாபக்கல். இது யாரை சென்று சேருகிறதோ அவர்கள் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பப்பட்டு, அடுத்த வாரம் நேரடியாக நாமினேஷன் செய்யப்படுவார்". என்று ரவீனா வாசித்து முடித்தவுடன் "பயங்கரமான சாபமாக இருக்கே" என்று சரவணன் கூறுகிறார்.. அத்தோடு விட்டாங்களா.. அடுத்தடுத்து ஒவ்வொருவரும் சொல்லி வச்ச மாதிரி அத்தனைப் பேரும்.. (நம்ம விச்சு அக்கா கூடத்தான்) கூல் சுரேஷ், கூல் சுரேஷ் அண்ணா , கூல் என்று ஒவ்வொருத்தருமே கூல் சுரேஷைக் கையைக் காட்ட "தலைவன்" பொங்கிட்டாப்டி!
கோபமக, "நான் சீரியஸாகத்தான் கேட்கிறேன். உங்களுக்கு ஒரு இளிச்சவாயன் வேணும். அதற்கு நீங்க என்னை தேர்வு செய்வீங்க. ஏமாந்த ஆள் என்ன மட்டும் வச்சு செய்யுங்கப்பா. நானே கல்லை எடுத்துக்கிறேன்" என்று ஆத்திரமடைந்து கூல் சுரேஷ் சொல்லும் போது மற்றவர்கள் சொல்ல வருவதை கேட்காமல் , மேலும் கோபமடைந்து கத்துவதோடு இந்த பிரமோ முடிகிறது.
இப்படி அனைத்து போட்டியாளர்களும் தனக்கு எதிராக இருப்பதை அறிந்து கொண்ட கூல் சுரேஷின் அடுத்த கட்டநடவடிக்கை எப்படி இருக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கணும்.. ஆமா.. கூல் ஜாலியாத்தானே இருந்தார்.. இன்னிக்கு ஏன் இப்படி கொந்தளிச்சு குமுறிட்டாரு.. ஒரு வேளை கூல்.. ஹாட்டாகப் போகுதோ!
நமக்கெல்லாம் இதைப் பாக்கிறப்ப ஜாலியாத்தாம்ப்பா இருக்கு!
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}