சாணியால் வீடு கட்டினால்.. அணு ஆயுதத் தாக்குதல் நடந்தாலும் பாதிக்கப்படாது.. குஜராத் நீதிபதி !

Jan 23, 2023,01:06 PM IST
அகமதாபாத்: குஜராத் மாநில நீதிபதி ஒருவர், சாணியால் வீடு கட்டினால், அணு ஆயுதத் தாக்குதலே நடந்தாலும் கூட அதிலிருந்து வீடு தப்பி விடும் என்று தீர்ப்பின்போது கூறியுள்ளார்.



குஜராத் மாநிலம் தபி மாவட்டத்தில் உள்ள முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் பசுவதை தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதி சமீர் வினோத்சந்திர வியாஸ் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். தீர்ப்பின்போது அவர் சில கருத்துக்களைத் தெரிவித்தார்.

நீதிபதி கூறுகையில், பூமியில் பசு வதையைத்தடை செய்து விட்டால் அனைத்துப் பிரச்சினைகளும் தீர்ந்து விடும்.  பசுவிலிருந்துதான் மதம் பிறந்தது. பசுவின் சாணியால் வீட்டைக் கட்டினால், அணு ஆயுதத் தாக்குதலே நடந்தாலும் கூட வீடு பாதிக்கப்படாது. பசுவின் சிறுநீர் பல வியாதிகளைப் போக்கும் குணம் கொண்டது. சாணியால் கட்டப்படும் வீடுகள் பலமானவை என்று அறிவியலே நிரூபித்துள்ளது என்றார் நீதிபதி சமீர் வினோத் சந்திர வியாஸ்.

இவரது இந்தக் கருத்து சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் கூறியது போல பசுவின் சிறுநீர் வியாதிகளைக் குணமாக்குவதாக அறிவியல்பூர்வமாக இதுவரை நிரூபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

பாஜக, திமுக, அதிமுக.. அடுத்தடுத்து ஆளுநரை சந்தித்த தலைவர்கள்.. தவெக அரசுக்கு நெருக்கடியா?

news

ஜூலை 20 முதல் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர்: மத்திய அரசு அறிவிப்பு

news

Lookout Notice: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு லுக் அவுட் நோட்டீஸ்

news

குதிரை பேர விவகாரம் : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தம்பி அசோக் ஆஜராக சம்மன்

news

Lokbhavan announcement: மக்கள் இனி ஆளுநர் மாளிகையில் புகார் அளிக்கலாம் : ஆளுநர் மாளிகை தகவல்

news

சி.விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கு: 12 வாரங்களுக்குள் விசாரித்து முடிக்க உத்தரவு

news

ADMK: அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை

news

"நான் வெளிநாட்டில் இருந்தாலும் என் மனம் அறிவாலயத்தில் தான் இருக்கும்" – மு.க.ஸ்டாலின் உருக்கம்!

news

சகோதரரை வீடு புகுந்து தாக்கிய வழக்கு: அமைச்சர் மரியவில்சன் ஆஜராகவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்