- எழுத்தாளர் ஜோதிலட்சுமி
ரோனியும், திமோதியும் வழக்கம் போல வேலைக்கு வந்திருந்தனர். சமீப காலமாக ரோனியின் போக்கு சரியாக இல்லை என்று திமோதிக்குத் தோன்றியது. இதனால் திமோதி சற்று வெளியே போயிருந்த சமயத்தில், அவனது பையை சோதனையிட்டான் திமோதி. அப்போது அதில் இருந்த கருவிகள் மற்றும் பிற பொருட்களைப் பார்த்ததும் திமோதி திடுக்கிட்டான். ரோனி என்ன செய்கிறான் என்பதைக் கண்காணிக்கத் திட்டமிட்டான்.
அன்று மாலை வேலை முடிந்ததும் ரோனி தனது பையுடன் வெளியே கிளம்பினான். அவனுக்குத் தெரியாமல், திமோதி பின்தொடர்ந்தார். ரோனி சென்றது பழைய கைவிடப்பட்ட கட்டிடம் என்பதால் குழப்பமடைந்தான் திமோதி. அந்தக் கட்டிடத்தின் தரை தளத்தில் ஒரு கார் ஷெட் இருந்தது. ரோனி கார் ஷெட்டின் ஷட்டரைத் தூக்கும்போது, யாராவது தன்னைப் பார்க்கிறார்களா என்று சுற்றிப் பார்த்தான். ஆனால், அவனுக்குத் தெரியாமல், திமோதி ரோனியைப் பார்த்துக் கொண்டிருந்தான். அறைக்குள் நுழைந்ததும், ரோனி ஷட்டரை மூடினான்.
ரோனியின் பையில் அவனுக்குத் தெரியாமல் ஒரு கேமராவை செட் செய்து வைத்திருந்தான் திமோதி. இதனால் ஷட்டரை மூடினாலும் கூட ரோனி என்ன செய்கிறான் என்பதை அறிய முடிந்தது திமோதியால். உள்ளே சென்ற ரோனி செய்தது மற்றொரு அதிர்ச்சியைக் கொடுத்தது. ஆம், அங்கே பாதி முடிக்கப்பட்ட சவப்பெட்டி இருந்தது, ரோனி பாதி முடித்துவிட்டு மீதமுள்ள வேலையைச் செய்ய வந்திருப்பான் என்று யூகிக்க முடிந்தது. ஒரு சுத்தியலையும் ஆணிகளையும் கொண்டு வந்த வேலையைச் செய்ய ஆரம்பித்தான் ரோனி.
சுமார் அரை மணி நேரம் அங்கே வேலை செய்த பிறகு, ரோனி வெளியே வந்தான், திமோதியும் தன்னை யாரும் கவனிக்காதபடி ஒளிந்து கொண்டான். அவனை எதிர்கொண்டு என்ன என்று விசாரித்தால் உண்மை தெரியாமல் போகலாம் என்பதால் சற்று விட்டுப் பிடிக்க முடிவு செய்தான் திமோதி. அதனால் அவனுடன் இயல்பாக பேசி வந்தான். அவ்வப்போது அவனுடன் குடித்தான். ஒரு நாள், குடிக்கும் போது, நைசாக பிணங்கள், சவப் பெட்டிகள் குறித்து பேச்சு கொடுத்தான்.
அப்போது ரோனி ஒரு வார்த்தையைச் சொன்னான். "சில விஷயங்களைப் பற்றிப் பேசுவது சுவாரஸ்யமாக இருக்கிறது, நானும் ஒரு கொலை செய்தேன். ஆனால் அதை இப்போது உன்னிடம் சொல்ல முடியாது."
ரோனி சொன்னதைக் கேட்டு திமோதி அதிர்ச்சி அடைந்தான்.. அதேசமயம், சுவாரஸ்யமும் கூடியது.
திமோதி: "நீ ஏன் என்னிடம் சொல்ல வேண்டும்? நானும் உன்னைப் போலவே தான், நானும் ஒருவரைக் கொன்றிருக்கிறேன்."
ரோனி: "இல்லை, இல்லை, நீ யாரையும் கொன்றிருக்க வாய்ப்பில்லை. நீ அப்படி செய்ருந்திருந்தால், நீ இப்போது இருப்பது போல் அமைதியாக இருக்க மாட்டாய்.
திமோதி: "உனக்கு என் வரலாறு தெரியாது. நான் இங்கே ஐந்து வருடங்களாக இருக்கிறேன். இதற்கு முன்பு நான் பெங்களூரில் இருந்தேன். அவன் என்னை ஏமாற்றியதால் என் நண்பர்களில் ஒருவரை அங்கேயே கொன்றேன். அவனும் நானும் ஒரு தொழிலில் பங்குதாரர்களாக இருந்தோம். அவன் கணக்குகளைப் பார்த்துக் கொண்டிருந்தான். நான் வேலை செய்து கொண்டிருந்தேன். தொழிலை மேம்படுத்த நான் கடுமையாக உழைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் அவன் பணத்தை மட்டும் எண்ணிக் கொண்டிருந்தான். கடைசியில், அவன் ஒரு நஷ்டத்தைக் கூறி, எனக்கு வர வேண்டிய தொகையை நஷ்டமாகக் கணக்கிட்டு என்னை ஏமாற்றினான். அதனால் நான் தொழிலை விட்டு வெளியேற வேண்டியதாயிற்று".
ரோனி: "அய்யோ இது ஒரு பெரிய துரோகம்"
திமோதி: "ம்ம்... அந்த ஏமாற்றம்..., அந்த துரோகம் என்னை ஒரு கொலைகாரனாக மாற்றியது. ஆம், நான் அவனைக் கொல்ல முடிவு செய்தேன். சரியான நேரத்திற்காக பல நாட்கள் காத்திருந்தேன்."
ரோனி: "அப்படியா? சுவாரஸ்யமா இருக்கே"
திமோதி: "ஒரு இரவு, அவன் காரில் தனியாக பயணம் செய்வதைக் கேள்விப்பட்டபோது. நான் பின்தொடர்ந்து, காரை ஒரு வெறிச்சோடிய பகுதியில் நிறுத்தி, அவனை வெளியே அழைத்துச் சென்று, ஒரு முறை கத்தியால் குத்தினேன். அவன் கைகளை மடக்கி அடித்தான். என்னால் என் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. நான் மீண்டும் மீண்டும் குத்தினேன், அவன் செத்துப் போய் விட்டான்"
ரோனி: "பிறகு உடலை என்ன செய்தீர்கள்?"
திமோதி: "அதே காட்டில் உடலை பெட்ரோல் ஊற்றி தீ வைத்தேன். சந்தேகத்தைத் தவிர்க்க, நான் அவனது காரை ஓட்டி சென்று மற்றொரு தெருவில் ஒரு பரபரப்பான இடத்தில் நிறுத்தினேன். பின்னர் நான் ஒரு வருடம் பெங்களூரில் தங்கினேன், யாரும் என்னை சந்தேகிக்கவில்லை. அதன் பிறகுதான் நான் மும்பைக்கு வந்தேன்"
ரோனி: "கதை நன்றாக இருக்கிறது. நீங்கள் நிறைய பாலிவுட் திரைப்படங்களைப் பார்ப்பீர்கள் போல".
திமோதி: "ஹலோ.. நீங்கள் நம்ப வேண்டியதில்லை, ஆனால் நான் சொன்னது உண்மை"
.
திமோதி உண்மையிலேயே கொலை செய்தானா அல்லது அடித்து விடுறானா என்று ரோனி மனதில் யோசனை. இருந்தாலும் சொல்வது சுவராஸ்யமாக இருந்ததால் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தான்.
ரோனி: "சரி......, நீ பொய் சொல்லலன்னா. கொலைக்கு உன்கிட்ட என்ன ஆதாரம் இருக்கு?"
திமோதி: "நான் அவனைக் கொன்றேன்னு எனக்கு எந்த ஆதாரமும் இல்ல; அதனாலதான் நான் இங்கேயே பத்திரமா இருக்கேன். ஆனா, உனக்கு சில துப்புகளைத் தரேன். மைசூர் அரண்மனைக்கு அருகில் அவன் காரை நிறுத்தினேன். அதே காரின் டேஷ்போர்டில் சாவியை விட்டுட்டேன். நான் அவனைக் கொன்றப்போ, அவன் கழுத்துல இருந்து தங்கச் சங்கிலியை எடுத்து வச்சேன். நான் அதை விற்றாலோ அல்லது அடகு வைத்தாலோ பிடிபடுவேன்னு நினைச்சு, என் பெட்டியில இன்னும் பத்திரமா வச்சுட்டேன்"
ரோனி கைகளைத் தட்டி, "சரிதான்.. நீ சொன்னது உண்மைதான்" என்றான். அதைக் கேட்ட திமோதி திடுக்கிட்டான்.
"நீ சொன்னது கதை இல்ல.. அதாவது உன்னோட ஒப்புதல் வாக்குமூலம்"
இதைக் கேட்டு திமோதிக்கு மேலும் குழப்பம்.
"நீ சொன்ன எல்லாத்தையும் பதிவு பண்ணிட்டேன். உன் வாயாலயே இதை கேட்கத்தான் நான் மும்பைக்கு வந்தேன். என்ன குழப்பமா இருக்கா.. நான் யார்னு உனக்கு உண்மையிலேயே தெரியணும்னு ஆசையா? இங்க பாரு..." என்று சொல்லிவிட்டு தன் பையில் இருந்த ஒரு அடையாள அட்டையை எடுத்து திமோதியிடம் காட்டினான் ரோனி.
சற்று வெலவெலத்தபடி அதைப் பார்த்தான் திமோதி
"ரோனி IPS.. சிறப்பு புலனாய்வாளர், சிபிஐ"
GST reforms: புதிய ஜிஎஸ்டி.,யால் எவை எவை விலை குறையும்.. எது உயரும்.. பொருட்களின் முழு விபரம் !
ஜிஎஸ்டி வரி அடுக்குகள் நீக்கம்.. ஜிஎஸ்டியில் முக்கிய மாற்றம்.. புதிய வரிகள் செப்.,22 முதல் அமல்
படத்தில் வில்லன்...நிஜத்தில் ஹீரோ...வெள்ளம் பாதித்த மக்களுக்காக ஓடி வந்த சோனு சூட்
வெனிசுலா விவகாரம்...டிரம்ப்க்கு அமெரிக்க கோர்ட் கொடுத்த அடுத்த குட்டு
அதிகமாக வேலை செய்யும்போது சில நேரங்களில் வாழ்க்கையை இழந்துவிடுகிறோம்: ஏ.ஆர். ரகுமான்
மழைநீர் வடிகால் பணிகள் முடிந்த பாடில்லை.. மழைநீரும் வடிந்த பாடில்லை.. எடப்பாடி பழனிச்சாமி
உட்கட்சி பூசல்களை சரி செய்க...தமிழக பாஜக தலைவர்களுக்கு அமித்ஷா எச்சரிக்கை
விராட் கோலிக்கு லண்டனில் உடல் தகுதி தேர்வு நடத்த அனுமதி
பிஆர்எஸ் கட்சியில் இருந்து விலகுவதாக கவிதா அறிவிப்பு
{{comments.comment}}