-லீலாவதி
ஒரு ஊரில் சுந்தரி என்ற ஒருபெண் வாழ்ந்து வந்தாள். அவளுடைய கணவர் ஒருகுடிகாரன் வேலைக்கு எங்கும் வேலைக்கு செல்வதில்லை. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். சுந்தரியின் உழைப்பில் தான் குடும்பம் ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் வேலைக்கு சென்று வீட்டிற்கு வந்ததும் கணவனிடம் அடி உதை வேறு வாங்க வேண்டும். அந்த அளவிற்கு குடித்து விட்டு சித்ரவதை செய்வான்.
வேறு வழி இல்லாமல் தனக்கென்று ஒரு போக்கிடம் இல்லாத காரணத்தினாலும் தன்னைத் தவிர தன் குழந்தைகளுக்கு வேறு ஆதரவு இல்லாத காரணத்தினாலும் எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டிருந்தாள் சுந்தரி. இப்படியே காலம் சென்றது. குழந்தைகளும் ஓரளவு பெரயவர்களாகி விட்டார்கள். அன்றும் வழக்கம் போல சுந்தரி வேலைக்கு சென்று வீட்டிற்கு வந்ததும் சமையல் செய்து கொண்டு இருந்தாள்.

ஏய் சுந்தரி ஏய் சுந்தரி என்று கத்திக்கொண்டே இருந்தான் அவளது கணவன். சுந்தரியோ காதில் எதையும் வாங்காமல் அவள் வேலையில் மும்முரமாக இருந்தாள்.
அவனுக்கு வந்த கோபத்தில் உள்ளே சென்று சுந்தரியை அடித்து உதைத்து துன்புறுத்தினான். இத்தனை காலம் பொறுத்த அவளுக்கு இன்று என்னவாயிற்று என்று தெரியவில்லை. அவனிடம் வாங்கிய அடி உதையின் ரணம் தாங்காமல் தன்னை மாய்த்துக் கொண்டாள்.
அதை அவன் பெரிதாக கண்டுக் கொள்ளவில்லை உறங்கிவிட்டான். காலையில் கண்விழித்து பார்த்த போது தன் தாய் உயிரோடு இல்லை என்று தெரிந்த குழந்தைகள் கத்தி கூச்சலிட்டனர். அப்போது தான் அவள் கணவனுக்கு மனைவி இறந்திருப்பது தெரிந்தது. ஒரு வழியாக சுந்தரியை அடக்கம் செய்யப்பட்டாள். இந்த நிலையிலும் அவள் கணவன் திருத்திய பாடில்லை.
அந்தக் குழந்தைகள் இருவரும் தன் தாய் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் தினமும் சென்று கண்ணீர் விட்டு வருகின்றனர். இறந்தும் நிம்மதியில்லாமால் சுந்தரி ஆத்மா தன் குழந்தைகளை என்னி தவித்துக் கொண்டு இருந்தது. வழக்கம் போல நன்றாக குடித்து விட்டு உணவு பொட்டலம் வாங்கி அந்த இரவு நேரத்தில் மயானம் வழியாக வந்து கொண்டு இருந்தான். யாரோ அழும் சத்தம் கேட்டது இவனுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் மயானம் உள்ளே சென்று விட்டான்.
அங்கு ஒரு பெண்அந்த பக்கம் தரும்பியவாறு உட்கார்ந்து கொண்டு அழுது கொண்டு இருந்தாள். இவனுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. இவனும் அந்த பெண்ணின் அருகில் போய் அமர்ந்து கொண்டு ஏய்.... ஏன் அழுகுற ஏய்..என்னா ஏதேதோ உளறி கொண்டு இருந்தான். நெடுநேரம் ஆகியும் அந்த பெண் அழுவதை நிறுத்தவில்லை. ஒரு வழியாக, ஓரளவு போதையும் தெளிய, அருகில் யாரோ இருப்பதை பார்த்து யார் இது நாம் எங்கே இருக்கிறோம் என்று தெரியாமல் சுத்தி முத்தி பார்த்தான்.
அப்போது தான் அவனுக்கு பயமே வந்தது. மெல்ல திரும்பினான் அவனருகில் சுந்தரி கண்ணீருடன் அமர்ந்து இருந்தாள். இவனுக்கு அந்த முகத்தை பார்த்ததும் பயத்திற்கு பதிலாக பாசம் வந்தது. சுந்தரி என்று சத்தமாய் அழுது கொண்டே அவளை கட்டி அணைத்தான் அந்த ஆத்மா கைக்குள் இல்லை என்று தெரிந்த அவன் மீண்டும் சத்தமாக அழுதான். இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த மற்ற ஆத்மாக்கள் ஆறுதல் கூற முடியாமல் கண்ணீருடன் நின்று கொண்டு இருந்தது.
உன்னோட சுந்தரியின் இந்த நிலைமைக்கு நான் தான் காரணம் என்று துடித்தான். சுந்தரி தன் கணவரின் அருகில் வந்து என்னங்க அழாதீங்க நான் அவசர பட்டுட்டேன். என்ன செய்வது என தெரியாமல் செய்துவிட்டேன். என்னை மன்னித்து விடுங்கள் என்று அழுதாள். குழந்தைகளை கைவிட்றாதீங்க என்று அழுது மறைந்தாள். இதை பார்த்த சுந்தரியின் கணவன் மிகவும் கனத்த இதயத்தோடு வீட்டிற்கு வந்தான். தன்வருகையை எதிர்பார்த்து நின்ற கோலத்தில் தன் குழந்தைகளை தன் நெஞ்சோடு வாரி அனைத்து கொண்டான்.
குடியை மறந்தான் குழந்தைகளுக்காக வாழ்ந்தான். சுந்தரி ஆத்மாவும் சாந்தி அடைந்தது. அவசரத்தில் எடுக்கும் முடிவால் சாதிக்க போவது ஒன்றும் கிடையாது.உயிரை
மாய்த்தால் உயிர் தான் போகுமே தவிர உடன் எதுவும் வராது. விட்டு கொடுத்து வாழ்வது தான் வாழ்க்கையே தவிர உயிரை மாய்த்துக்கொள்வது வாழ்க்கையல்ல. நீயா?நானா?என்றால். முடிந்து விடும் வாழ்க்கை.
(லீலாவதி, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)
CMக்கு முடியவில்லை என்றால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற வேண்டும் என்று சட்டம் போடுவோம்: சீமான்
4 திட்டங்களால் ஒரு குடும்பத்திற்கு மாதம் ரூ. 4,000 மிச்சமாகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழக சட்டசபை தேர்தல் 2026 : பாஜக விஐபி வேட்பாளர்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள்
பொம்மை முதல்வரே... என்னோடு நீங்கள் நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா?: எடப்பாடி பழனிச்சாமி சவால்!
ராமதாஸ்-அன்புமணி மோதலால் தமிழக சட்டசபை தேர்தலில் பாமக.,வின் ஓட்டு வங்கி சரியுமா?
பூக்கள் பூக்கும் தருணம்.. அதை விடுங்க.. தமிழகத்தின் மலர் எது தெரியுமா?
14 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இங்கிலாந்து
SIR 2026 தமிழக சட்டசபை தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?
திமுக எதிர்ப்பு .. இது மட்டும் போதுமா அதிமுக வெற்றி பெற.. எங்கேயே இடிக்குதே!
{{comments.comment}}