பூரி: வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள டானா புயல் காரணமாக இன்றும் நாளையும் கொல்கத்தாவில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் கொல்கத்தா மற்றும் புவனேஸ்வருக்கு விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள டானா புயல் இன்று தீவிரப் புயலாக வலுப்பெற்றது. இந்தப் புயல் தற்போது வடமிருக்கு திசையில் 12 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது. இது நாளை ஒடிசாவின் பூரி கடற்கரை மற்றும் மேற்கு வங்கம் சாகர் தீவுப் பகுதிக்கும் இடையே அது தீவிரப் புயலாகவே கரையை கடக்க உள்ளது.அப்போது சூறாவளி காற்று மணிக்கு 100 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 120 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
இதனால் ஒடிசாவில் உள்ள பாலசூர், பத்ரக், கேந்திரபாரா, மயூர்பன்ஜ், ஜகத்சிங்பூர் புரி ஆகிய இடங்களிலும், மற்றும் மேற்குவங்க பகுதிகளில் புர்பா மெதினிபூர், ஜார்கிரம், கொல்கத்தா, ஹவுரா, ஹூக்ளி, பஸ்சிம், தெற்கு 24 பர்கனாஸ் ஆகிய இடங்களிலும் இன்றும் நாளையும் கன முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக ஒடிசா மற்றும் மேற்குவங்க பகுதிகளில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் பாதுகாப்பு கருதி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது மாநில அரசுகள்.
அதன்படி, கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் மற்றும் பாதிக்கக்கூடிய பகுதிகளில் உள்ள சுமார் 20 லட்சம் மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒரிசாவில் 20 தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும், மேற்கு வங்கத்தில் 13 தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் என மொத்தம் 33 பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் டானா புயல் ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தை நோக்கி நகர்ந்து வருவதால் கொல்கத்தாவில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக 120 கிலோமீட்டர் வேகத்தில் காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் மக்களின் பாதுகாப்பு கருதி முன்கூட்டியே கொல்கத்தா மற்றும் புவனேஸ்வருக்கு விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டிலிருந்து 7 ரயில்கள் ரத்து
டானா புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாட்டில் இருந்து ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்திற்கு செல்லும் 21 ரயில்களும், அங்கிருந்து தமிழ்நாட்டிற்கு வரும் 7 ரயில்கள் என 28 ரயில்கள் உட்பட, மொத்தம் 300 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதற்கிடையே குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் இன்று நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி ஆகிய 9 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
IMD alert: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு.. அடுத்த 12 மணி நேரத்தில் வலுவிழக்கும்.. அதி கன மழைக்கு வாய்ப்பு
திருவண்ணாமலை.. தீப மலையின் உச்சியை அடைந்தது தீபம் ஏற்றும் ராட்சத கொப்பரை!
3 மாவட்டங்களில் இன்று அதிகன மழைக்கான ரெட் அலர்ட்.. நாளை தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
Yearender 2024: அஜீத்தால் பிரபலமடைந்த அஜர்பைஜான்.. அதிகம் கூகுள் செய்யப்பட்ட நாடு இதுதான்!
Yearender 2024: நாக்கில் வச்சதும்.. நச்சுன்னு சுவைக்கும் மாங்காய் ஊறுகாய்க்கு.. தேடுதலில் 2வது இடம்!
கார்த்திகை தீபத் திருநாள் ஸ்பெஷல் நைவேத்தியம்...கார்த்திகை பொரி பற்றி இதெல்லாம் தெரியுமா?
ஆங்கில புத்தாண்டு 2025 ராசிபலன் : மேஷம் ராசி வாசகர்களே.. இந்த வருஷம் உங்க வருஷம்.. ஜமாய்ங்க!
திருக்கார்த்திகை தீபத் திருநாள் 2024: எந்த நேரத்தில், எப்படி விளக்கேற்ற வேண்டும்?
Yearender 2024: இந்தியர்களால் அதிகம் தேடப்பட்ட.. நபர்கள், விளையாட்டுகள்.. இதோ லிஸ்ட்!
{{comments.comment}}