சென்னை: ஃபெஞ்சல் புயல் சென்னைக்கு 100 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ள நிலையில், இன்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடைவிடாத பலத்த மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான ஃபெஞ்சல் புயல் தமிழகத்தை மிரட்டி வருகிறது. குறிப்பாக சென்னையில் நிலவி வரும் பலத்த காற்று மற்றும் கனமழையின் எதிரொலியால் சென்னை மாநகரமே மழையில் நடுங்கிக் கொண்டுள்ளது. தாழ்வான இடங்கள், சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல இடங்களில் இது வடிந்தும் வருகிறது. தண்ணீர் வீடுகளுக்கும் சென்றதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
செல்பி எடுக்கக் குவியும் மக்கள்
பட்டினப்பாக்கம் லூப் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு பலத்த சூறாவளி காற்று வீசி வருகிறது. அங்குள்ள கடற்கரையில் கடல் பலத்த சத்தத்துடன் பெரும் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனை வேடிக்கை பார்க்க பொதுமக்கள் ஆபத்தை உணராமல் கூட்டம் கூட்டமாக செல்கின்றனர். அங்கு செல்பி எடுப்பது விளையாடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை அறிந்த தமிழக அரசு மக்கள் வெளியே செல்வதை தவிர்த்து விட்டு பாதுகாப்பாக வீட்டுக்குள்ளே இருக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.
சென்னையில் மழை சற்று ஓய்ந்திருந்த நிலையில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக மழை நீரை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் மீண்டும் தற்போது சென்னை பட்டினப்பாக்கம், சாந்தோம், மெரினா, அடையாறு, மந்தவெளி, எம் ஆர் சி நகர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மீண்டும் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக செம்பரம்பாக்கத்தில் பத்து சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
மெதுவாக வரும் புயல்
இந்த நிலையில் வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் சென்னை மற்றும் புதுச்சேரிக்கு 100 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ளது. முன்னதாக 13 கிலோமீட்டர் வேகத்தில் வேகமாக நகர்ந்த புயலின் வேகம் தற்போது மணிக்கு பத்து கிலோமீட்டர் வேகத்தில் குறைந்துள்ளது. இந்த ஃபெஞ்சல் புயல் இன்று இரவு கரையைக் கடக்க கூடும். இதன் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடைவிடாத மழை பெய்ய வாய்ப்புள்ளதாக என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சிறப்பு பேருந்துகள் இயக்கம்:
சென்னை, விமான நிலையத்தில் இருக்கும் பயணிகளின் வசதிக்காக மாநகர் போக்குவரத்து கழகம் சார்பாக சென்னை விமான நிலையத்திலிருந்து சென்ட்ரல், பிராட்வே, கோயம்பேடு மற்றும் சாலைகளில் கிளாம்பாக்கம் ஆகிய பேருந்து நிலையங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}