ஃபெஞ்சல் புயல்.. 2024ம் ஆண்டில்.. வங்கக் கடலில் பிறந்த 3வது புயல்.. வட கிழக்கு பருவ காலத்தில் 2வது!

Nov 29, 2024,05:17 PM IST

சென்னை: 2024ம் ஆண்டில், வங்கக் கடலில் ரிமால், டானா என  ஏற்கனவே 2 புயல்கள் உருவான நிலையில் தற்போது 3வதாக ஃபெஞ்சல் புயல் உருவாகியுள்ளது. இதில் வடகிழக்கு பருவமழை காலத்தில் உருவான 2வது புயல் என்ற பெயரைப் பெற்றுள்ளது ஃபெஞ்சல்.

கடந்த மே மாதம் மத்திய கிழக்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக உருவானது. இந்த புயலுக்கு ரிமால் என பெயரிடப்பட்டது‌.  ஆனால் இந்தப் புயல் தமிழ்நாட்டுப் பக்கம் வரவில்லை. மாறாக  ரிமால்  புயல் மேற்குவங்கம் மாநிலத்தில் கரையை கடந்ததால் கொல்கட்டா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிக கனமழை கொட்டி தீர்த்தது.



இதனையடுத்து வங்க கடலில் மீண்டும்  அக்டோபர் 23 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு கத்தார் நாடு பரிந்துரைத்த டானா என பெயரிடப்பட்டது. இந்தப் புயலும் நமக்கு வரவில்லை. தமிழக கடற்கரை பகுதிகளை விட்டுவிலகி, ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தை நோக்கி நகர்ந்தால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

தற்போது தென்கிழக்கு வங்க கடலில் உருவான காற்றழுத்தமானது தற்போது புயலாக மாறி தமிழ்நாட்டை நெருங்கிக் கொண்டுள்ளது. இந்த புயலுக்கு  சவுதி அரேபியா பரிந்துரைத்த ஃபெஞ்சல் என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் புயல் நாளை வட தமிழ்நாடு புதுச்சேரி கடற்கரை பகுதிகளில் மாமல்லபுரத்திற்கும் காரைக்காலுக்கும் இடையே கரையை கடக்க உள்ளது. இதனால் இன்றும் நாளையும் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. 

வங்கக் கடலில் உருவான முதல் இரு புயல்களாலும் தமிழகத்துக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. 3வது புயலால் என்ன மாதிரியா விளைவுகள் ஏற்படும் என்பது நாளை இரவுக்குள் தெரிந்து விடும்.

இந்த நிலையில் இந்த ஆண்டு  வங்கக்கடலில் ரிமால், டானா, ஃபெஞ்சல், என  3 புயல்கள் உருவாகியுள்ளன. இதில் வடகிழக்கு பருவமழை காலத்தில் மட்டும் 2 புயல்கள் உருவாகி உள்ளது. அதில் டானா புயலால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால் தற்போது உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் எவ்வளவு வீரியத்துடன் உள்ளது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கரூரில் விஜய் பேரணியின் போது நடந்தது இதுதான்.. வீடியோ போட்டு விளக்கிக் கூறிய அமுதா ஐஏஎஸ்!

news

கரூர் சம்பவத்திற்குப் பிறகு திமுக அரசு முற்றிலும் சீர்குலைந்துள்ளது.. எடப்பாடி பழனிச்சாமி

news

தமிழகத்தில் இன்று முதல் அக்., 4ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்

news

உறுதியாக எனது அரசியல் பயணம் தொடரும்... சீக்கிரமே எல்லா உண்மைகளும் வெளியே வரும்: விஜய்!

news

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: தவெக நிர்வாகிகள் மதியழகன், பவுன்ராஜ் கைது

news

விஜய்க்கு ஆதரவாக களமிறக்கப்படும் இன்ப்ளூயன்சர்கள்?.. ஆனால் இதெல்லாம் வேலைக்காகாதே!

news

மதுவிலக்கு தான் மகாத்மாவின் கொள்கை: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

திருவண்ணாமலையில் ஆந்திரப் பெண் பலாத்காரம்.. எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம்

news

கரூர் கொடுந்துயரத்தில் தனது அரசியல் விளையாட்டை வெளிப்படையாக தொடங்கிவிட்டது பாஜக: திருமாவளவன்

அதிகம் பார்க்கும் செய்திகள்