சென்னை: வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது ஃபெஞ்சல் புயலாக மாறியுள்ளது. நாளை இது மாமல்லபுரம் அருகே கரையைக் கடக்கவுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற கூடும் என முதலில் அறிவிக்கப்பட்டது. இந்த புயலுக்கு சவுதி அரேபியா பரிந்துரைத்த ஃபெஞ்சல் எனவும் பெயரிடப்படும் என்று கருதப்பட்டது. ஆனால் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒரே இடத்தில் நீடித்திருந்ததால் புயலாக வலுப்பெறுவதில் தாமதம் ஏற்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது.
இதனால் மழை குறைந்து பலத்த காற்று வீசி வந்தது. மேலும், வங்க கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறாது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே வலுவிழந்து கரையைக் கடக்கும் என நேற்று அறிவிப்பு வெளியானது. இருப்பினும் இன்றும் நாளையும் அதிக கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தற்போது வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற இருப்பதாக இன்று காலை சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி தற்போது இது புயலாக மாறியுள்ளது. ஃபெஞ்சல் என்று பெயர் சூட்டப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சவூதி அரேபியா வைத்த பெயர் இது.
இது தொடர்ந்து புயலாகவே வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம், மற்றும் புதுச்சேரி கடற்கரைப் பகுதிகளில் மாமல்லபுரத்திற்கும் காரைக்காலுக்கும் இடையே புதுச்சேரிக்கு அருகில் நாளை மதியம் கரையை கடக்க கூடும். புயல் கரையைக் கடக்கும் போது 70 முதல் 80 கிலோமீட்டர் வேகத்திலும் இடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் பலத்த சூறாவளிக்காற்று வீச கூடும். இதன் காரணமாக வட கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், ஒரு சில இடங்களில் கன முதல் மிக கன மழையும் ஓரிரு இடங்களில் அதிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என அறிவித்துள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நவம்பர் 23ம் தேதி இந்த புயல் சின்னமானது வங்கக் கடலில் உருவாகி கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு புயலாக அவதாரம் எடுத்துள்ளது. வங்கக் கடலில் இந்த ஆண்டு உருவான 3வது புயலாகும் இது. அதேசமயம், வட கிழக்குப் பருவ மழைக்காலத்தில் உருவான 2வது புயல் இது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
IMD alert: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு.. அடுத்த 12 மணி நேரத்தில் வலுவிழக்கும்.. அதி கன மழைக்கு வாய்ப்பு
திருவண்ணாமலை.. தீப மலையின் உச்சியை அடைந்தது தீபம் ஏற்றும் ராட்சத கொப்பரை!
3 மாவட்டங்களில் இன்று அதிகன மழைக்கான ரெட் அலர்ட்.. நாளை தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
Yearender 2024: அஜீத்தால் பிரபலமடைந்த அஜர்பைஜான்.. அதிகம் கூகுள் செய்யப்பட்ட நாடு இதுதான்!
Yearender 2024: நாக்கில் வச்சதும்.. நச்சுன்னு சுவைக்கும் மாங்காய் ஊறுகாய்க்கு.. தேடுதலில் 2வது இடம்!
கார்த்திகை தீபத் திருநாள் ஸ்பெஷல் நைவேத்தியம்...கார்த்திகை பொரி பற்றி இதெல்லாம் தெரியுமா?
ஆங்கில புத்தாண்டு 2025 ராசிபலன் : மேஷம் ராசி வாசகர்களே.. இந்த வருஷம் உங்க வருஷம்.. ஜமாய்ங்க!
திருக்கார்த்திகை தீபத் திருநாள் 2024: எந்த நேரத்தில், எப்படி விளக்கேற்ற வேண்டும்?
Yearender 2024: இந்தியர்களால் அதிகம் தேடப்பட்ட.. நபர்கள், விளையாட்டுகள்.. இதோ லிஸ்ட்!
{{comments.comment}}