Cyclone Remal.. நாளை மறுநாள்.. வங்கக் கடலில் உருவாகிறது ரெமல் புயல்.. வானிலை மையம் அறிவிப்பு!

May 23, 2024,09:53 PM IST

சென்னை: வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை காற்றழுத்தமாக வலுவடைந்து அதற்கு அடுத்த நாள், அதாவது மே 25ஆம் தேதி புயலாக உருவாகிறது. இந்தப் புயலுக்கு ரெமல் என பெயரிடப்படவுள்ளது.

 

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. விரைவில் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மறுநாள் புயலாக உருவாக கூடும்  என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.




மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மே 25ஆம் தேதி புயலாக மாறி வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து 26ஆம் தேதி மாலையில் வங்கதேசம் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்க கடற்கரை அருகே தீவிரப்புயலாக வலுப்பெறும். ஓமன் நாடு பரிந்துரைப்படி, இந்த புயலுக்கு ரெமல் என பெயரிடப்படும்.  இந்த வருடத்தில் வங்கக் கடலில் உருவாகும் முதல் புயல் இதுவே.


இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று 12 முதல் 20 சென்டிமீட்டர் வரை மிக கனமழை பெய்வதற்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கையும், நாளை கனமழைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கையும் வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. 


இன்று மிக கன மழை:


நீலகிரி,கோவை, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த ஐந்து மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இன்று கனமழை:


ஈரோடு,திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.


நாளை கனமழை:


திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, ஆகிய மாவட்டங்களில் நாளை கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

தங்கம் விலை நேற்று மட்டுமில்லைங்க இன்றும் குறைவு தான்... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

அதிகம் பார்க்கும் செய்திகள்