- கலைவாணி கோபால்,
சென்னை: டிட்வா புயல் நெருங்கி வருவதைத் தொடர்ந்து தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட ஒன்பது துறைமுகங்களில் சூறாவளிக் காற்றின் வேகம் காரணமாக 4 ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது
சென்னை விமான நிலையத்திலிருந்து இயக்கப்படும் 54 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னை விமான நிலையத்தில் இருந்து பெங்களூர், தூத்துக்குடி, மதுரை, ஹைதராபாத், திருச்சி போன்ற ஊர்களுக்கு செல்லும் சிறிய ரக விமானங்களான ஏடிஆர் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இவை பெரும் சூறாவளி காற்றின் வேகத்தை தாக்கு பிடிக்காது என்பதற்காக சென்னையில் இருந்து போவதற்கும் அங்கிருந்து திரும்ப வருவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னைக்கு தெற்கில் 350 கிலோமீட்டர் தொலைவிலும், காரைக்காலுக்கு தென்கிழக்கே 190 கிலோமீட்டர் தொலைவிலும், புயல் மையம் கொண்டுள்ளது
ரெட் அலர்ட் மாவட்டங்கள்

டிட்வா புயல் காரணமாக சூறாவளி உடன் சேர்ந்து பெரும் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதால் முன்னெச்சரிக்கையாக மயிலாடுதுறை, தஞ்சாவூர், செங்கல்பட்டு, கடலூர் மற்றும் ஆந்திர மாநிலம் திருப்பதி, நெல்லூர் போன்ற மாவட்டங்களிலும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
(கலைவாணி கோபால், தென்தமிழ் செய்தி இணையதாளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)
அதிமுக மயமாகும் தவெக.. கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், மு.சி. சம்பத்.. இன்று இணைகின்றனர்!
Tamil Short Story: அழகு கோலம்!
Tamil Poem: மன(தின்)வலி
Classical Tamil: செம்மொழியாகிய தமிழ் மொழியே!
We The Leaders: புதிய அரசியல் இயக்கம்.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டி.. அண்ணாமலை அறிவிப்பு!
தமிழகத்தில் தீவிரம் அடையும் தென்மேற்கு பருவமழை: 4 மாவட்டங்களுக்கு நாளை ‘ஆரஞ்சு அலர்ட்’
Annamalai Politics: அண்ணாமலையின் அரசியல் எப்படி இருக்கும்?
பாஜகவிலிருந்து விலகினார்.. அண்ணாமலையின் புதிய சகாப்தம் இன்று தொடங்குகிறது!
இலங்கையில் பரிதாபம்.. முதியோர் இல்லத்தில் கோர தீ விபத்து.. 12 பேர் உயிரிழப்பு
{{comments.comment}}