- J லீலாவதி
மேட்டுப்பாளையம்: நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சிறு கிராமம் எங்களுடையது. 500 குடும்பங்களை கொண்ட கிராமம். இங்கே விவசாயம் தான் தொழில். அமைதியான வாழ்க்கை.. இங்கே யாருக்கும் வேறு எந்த தொழிலும் தெரியாது. ஆண்கள் மூட்டை சுமக்கவும் பெண்கள் களை எடுக்கவும் காய்கறி பறிக்கவும் இந்த மாதிரி தொழில் செய்து வந்தோம்.
அப்போது விடாத மழை. மழை பெய்தால் தோட்டத்திற்குள் யாரும் இறங்க கூடாது. தொடர்ந்து ஒரு மாதத்திற்கு மேல் மழை தூரிக் கொண்டே இருந்தது. இதனால் அனைவரும் வேலை இல்லாமல் உழைக்க வேறு வழி இல்லாமலும் தவித்துக் கொண்டிருந்தோம். இருக்கும் அரிசி பருப்பு என அனைத்தும் அனைவரும் மாறி மாறி கொடுத்து உதவிட்டு இருந்தோம்.
அந்த கிராமத்துல எல்லாம் மண் வீடு, ஓட்டு வீடுதான். யாரோ ஒரு சிலர்தான் பெரிய வீடு வைத்திருந்தனர். வீட்டிற்குள் மழை பெய்து வெளியில் எப்படி இருக்கும் அப்படியே வீட்டிற்குள் இருந்தது. எங்கள் தந்தை வீட்டுக்குள்ள என்னென்னமோ செய்து மழைநீர் உள்ளே வராமல் எங்களையும் பாதுகாத்தார்.

ஒரு இரவு நேரம் அம்மாவும் அப்பாவும் சாப்பிடல. இருக்கிறது எங்களுக்கு கொடுத்துட்டு ஒரு ஓரமா அவங்க ரெண்டு பேரும் அழுதுட்டு இருக்காங்க. அந்த வயசுலயே எங்களுக்கு உயிரே போற மாதிரி ஆயிடுச்சு. அந்த சிறு வயசுல எங்களுக்கும் வேற எந்த வழியும் தெரியல. சாப்பிட்டு எல்லாம் தூங்கிட்டு இருக்கோம். திடீர்னு வெளியில் ஒரே சத்தம் எல்லாரும் எந்திரிச்சுட்டோம்.
ஒரு பெரிய வீடு மேலே உயரத்துல இருக்கு அங்க இருந்து ஒரே சத்தம் நாங்க யாரும் அந்த இரவில் ஆற்றை கடந்து அங்கே செல்ல முடியாது. ஊர் முழுக்க இருள் சூழ்ந்திருந்தது. அலறும் சத்தம் மட்டும்தான் மட்டும் இருக்கிறது.. யாராலையும் ஒன்னும் பண்ண முடியல. காலையில எல்லாரும் கூட்டம் கூட்டமா போறாங்க. அப்பவும் மழை.போய் பார்த்தா உயரத்தில் இருந்து ஒரு வீடு அப்படியே பள்ளத்தில் வந்து விழுந்து கிடக்கிறது. சேரும் சகதியுமா இருந்ததினால் ஜேசிபி எந்திரம் மூலம் தோண்டி எடுக்கிறார்கள். ஒருவர் கூட அந்த வீட்டில் உயிரோடு இல்லை. கை கால் தனியா வருகிறது.
இன்னொரு குடும்பம் பிழைக்க வழியில் இல்லாமல் இரு குழந்தைகளுடன் தோட்டத்தின் நடுவில் உள்ள ஒரு கிணற்றில் விழுந்து விட்டனர். இதுவும் ஒரு வாரம் கழித்து பின்பு தான் அந்த உடல்கள் மேலே வந்ததும் ஊர் மக்களுக்குத் தெரிய வந்தது.
இன்றும் மழைக்காலம் என்றால் எங்களுக்கு பயம் தான். ஆனால் நாங்கள் இப்பொழுது அந்த ஊரில் இல்லை. வேறு ஊருக்கு வந்து 25 வருடம் ஆகிவிட்டது அங்கு செல்வதற்கும் மனமே இல்லை. அந்தக் கொடுமையான வாழ்க்கையிலிருந்து தப்பிப் பிழைத்த காளான்கள் நாங்கள்!
(J லீலாவதி, தென்தமிழ் செய்தி இணையதாளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)
சபரிமலை மகரஜோதி தரிசனம் 2026...சாமியே சரணம் ஐயப்பா...சரண கோஷம் விண்ணை பிளக்க பக்தர்கள் பரவசம்
பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு-இடை நிலை ஆசிரியர்களுக்கு விரைவில் நற்செய்தி-அமைச்சர் தகவல்
அதிமுக நேர்காணல்...சென்னை நிர்வாகிகளை வறுத்தெடுத்த இபிஎஸ்
ராகுல் காந்தியின் ‘ஜனநாயகன்’ ஆதரவு ட்வீட்: உறுதியாகிறதா காங்கிரஸ்-தவெக கூட்டணி?
விஜய்யை சாதாரணமாக எடை போட முடியாது... விஜய்க்கு தனி கூட்டம் உள்ளது: அண்ணாமலை
பொங்கலுக்கு மழை பெய்ய வாய்ப்பில்லை: வானிலை மையம் தகவல்!
மோடி பங்கேற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்ட பராசக்தி படக்குழுவினர்
சென்னையைச் சுற்றிப் பார்க்க 'சென்னை உலா': புதிய சுற்றுலாப் பேருந்து சேவை தொடக்கம்!
லீக்கான கூட்டணி பிளான்...நெருக்கடியில் டிடிவி தினகரன்
{{comments.comment}}