சென்னை: ஜிவி பிரகாஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதல் முறையாக இணைந்து நடித்த டியர் படம் கடந்த ஏப்ரல் பதினோராம் தேதி வெளியான நிலையில், இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. இதனால் டியர் படக் குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நட்மெக் புரொடக்ஷன் தயாரிப்பில், இயக்குனர் ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் டியர். இதில் ஜிவி பிரகாஷ் நாயகனாகவும், ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாகவும் முதன் முறையாக இணைந்து நடித்துள்ளனர். இவர்களுடன் காளி வெங்கட், இளவரசு, நந்தினி மற்றும் ரோகிணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

குறட்டை விடுவதை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு குறட்டையால் திருமண வாழ்க்கையில் எப்படியெல்லாம் குழப்பம் வருகிறது, சண்டை வருகிறது, அதை எப்படி சமாளிக்கிறார்கள் என்பதே இப்படத்தின் கதையாகும். மேலும் இப்படத்தின் கதைக்களம், கதை சொல்லும் பாணி, நடிகர்களின் தனித்துவமான நடிப்பு, பாடல்கள், இசை, பின்னணி இசை என அனைத்து அம்சங்களும் சிறப்பானதாக இருப்பதால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
டியர் திரைப்படம் கடந்த ஏப்ரல் பதினோராம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதனைத் தொடர்ந்து இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளது. ரசிகர்களின் தொடர்ந்த ஆதரவால் இப்படம் திரையரங்குகளில் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் வெள்ளி நாயகன் வெள்ளி நாயகி என போற்றப்படும், நடிகர் ஜீவி பிரகாஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதல் முதலாக இணைந்து நடித்திருப்பது படத்தின் வெற்றிக்கு காரணம் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதனால் இப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று திரையரங்குகளில் கூட்டம் குறையாமல் அதிகரித்துக் கொண்டே செல்கிறதாம்.
ஜெம் கிரானைட்ஸ் வீரமணி வழக்கில் லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் யார்? விசாரிக்க சிறப்பு குழு அமைப்பு!
"நிர்வாக அறிவு இருக்கிறதா?" – தவெக அரசை கடுமையாக விமர்சித்து மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
குற்றவாளிகள் ஒருவரையும் விடக்கூடாது: ஜெம் கிரானைட்ஸ் வீரமணி விவகாரத்தில் முதல்வர் அதிரடி உத்தரவு
ஜெம் கிரானைட் வீரமணி விவகாரம்: தவெக-திமுக இடையே முற்றும் மோதல்
ஆளுக்கு 8 ஓட்டு.. 9 மாத மழலை எடுத்துக் கொடுத்த சீட்டு.. கலகலப்பாக முடிந்த பள்ளித் தலைவர் தேர்தல்!
நடிகை அம்பிகா மீது சகோதரி ராதா பரபரப்பு புகார்: ரூ.46 கோடி மோசடி செய்ததாக போலீசில் புகார்
வங்கக்கடலில் தீவிரமடையும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!
ஏகாந்தம்.. அழகிய முழு நிலவொளியில் ஆனந்த ராகம் பாடி!
Short Story: காணாமல் போன கண்ணன்
{{comments.comment}}