- ஔவை அ.ர.தீபாரவி
படபடவென பறவைகள் ஆங்கே பறந்த வண்ணம்..
சிட்டுக்குருவிகள் தன் சிற்றலகால் ஒன்றையொன்று மோதிய வண்ணம்..
சத்தமேதுமில்லாமல் பட்டாம்பூச்சிகள்
அழகாகப் பறந்த வண்ணம்
சில்லென்ற காற்று தென்றலாய் ஒரு புறம் வருடிச் செல்ல..
சலசலவென ஆங்கே நீரோடைச்சத்தம்
அழகாக அனுமதியேதுமின்றிக் காது நுழைய..

திரும்பி ரசிக்கும் வேளையில்
எதிர்பாராமல்
சின்ன மஞ்சள் வண்ணத்துப் பூச்சி என் தோளமர..
ஆடாமல் அசையாமல் அவள்
அமரவே என் நிலை..
சிறிது நேரம் அப்படியே அழகாகச் சிறகை விரித்தும் குவித்தும் அவள்..
அதனைக் கண்ட என் விழிகளோ
ஆர்வத்தில் சிமிட்டிய வண்ணம்..
அழகான அமைதியான இடம் நானும் ஏட்டுடன் மரத்தடியில்..
காட்சியை இதோ
வரிகளோடு நான் மட்டுமா நீங்களும் தற்போது சோலைக்குள் இன்று..!
(கவித்துளியின் ஔவை அ.ர.தீபாரவி கோவையைச் சேர்ந்தவர். பி.காம்.டி.டி.எட், தமிழ் இசை இலக்கிய ஆர்வலர். தமிழ் பாடுவோம், தமிழ் அருவி, கவித்துளி நிறுவனர். ஈரவிழி இலக்கிய மன்ற ஒருங்கிணைப்பாளர். ஐந்தாண்டு காலமாக இணையத்தில் ஈடில்லாத் தமிழ் சேவை. கவிஞர்களை ஊக்கப்படுத்தும் பணிதனைச் செவ்வனே செய்து வருகிறார். கவிஞர்களின் உள்ளாார்ந்த திறனை வெளிக்கொண்டு வருவதே இவருடைய நோக்கம்).
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}