சென்னை: தீபாவளி திருநாளான இன்று தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை மையம் கன மழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை விடுத்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் தீபாவளிக் கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன. புதுச்சேரியிலும், காரைக்காலிலும் மக்கள் தீபாவளியைக் கொண்டாடி வருகின்றனர்.
தற்போது வட கிழக்குப் பருவ மழை சீசன் என்பதால் ஆங்காங்கு மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று 15 மாவட்டங்களுக்கு கன மழைக்கான எச்சரிக்கையை வானிலை மையம் விடுத்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள தகவல்:

மதுரைக்கு கன மழை எச்சரிக்கை
இன்று தமிழ்நாட்டில் மதுரை, திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் பரவலாக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை
நவம்பர் 1ம் தேதியான நாளை, நீலகிரி, கோயம்பத்தூர், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் நேற்று பெய்தது போல இன்று திடீர் கன மழை பெய்ய வாய்ப்பில்லை என்று ஏற்கனவே தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார் என்பது நினைவிருக்கலாம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Singapen Helpline Number: பெண்களே.. 1091 என்ற எண்ணை அழைத்தால்.. சிங்கப்பெண் படை விரைந்து வரும்!
FIFA WorldCup 2026: உலகக் கோப்பை கால்பந்து.. அமெரிக்காவில் அசத்தும் ஈரான்.. டிரம்பை கலாய்த்து மீம்ஸ்
பிரிட்டன் அரசியல்: 10 டவுனிங் ஸ்ட்ரீட்டின் சுழலும் கதவு.. கீர் ஸ்டார்மரும் பதவி விலகல்!
கையடக்கத்தில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்.. அசத்தலாக சாதிக்கும் நெல்லை ஆசிரியர் பொன் ரேகா!
Chettinadu Recipes: செட்டிநாடு அடுப்படியில் அதிரடி ஸ்வீட்.. மணக்க மணக்க கோதுமை அல்வா!
Monday Motivation: வாழ்வித்த வாழ்த்துகள் (சிறுகதை)
Tamil Short Story: நிறைவேறாத கல்லூரிக்கனவு!
தில்லைக்கூத்தன் கோயில்.. சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோவில் சிறப்புகள்!
இன்னிக்கி ஒரு பிடி.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்!
{{comments.comment}}