அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு செல்வோர்.. டாக்டர்களுக்கு ஒத்துழைப்பு கொடுங்க.. உதயநிதி ஸ்டாலின்

Nov 13, 2024,05:43 PM IST

சென்னை: அரசு மருத்துவமனைகளில் இரவு பகல் பாராமல் அரசு மருத்துவர்கள் டாக்டர்கள் சேவை செய்து வருகின்றனர். எனவே சிகிச்சைக்கு செல்வோர், அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.


சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு அரசின் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு தலைமை மருத்துவராக பணியாற்றி வரும் டாக்டர் பாலாஜியை, இன்று விக்னேஷ்வரன் என்ற இளைஞர் சரமரியாக கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. டாக்டரைக் குத்தி விட்டு சர்வ சாதாரணமாக அந்த நபர் நடந்து சென்ற வீடியோவும் வெளியாகி மேலும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. கையில் கத்தியுடன் அந்த நபர் வந்ததால் அவரைப் பிடிக்க முதலில் பாதுகாவலர்கள் தயங்கியுள்ளனர். பின்னர் அவர் கத்தியை கீழே போட்டு விட்டுச் சென்ற பிறகுதான் அவரை வளைத்துப் பிடித்து சரமாரியாக தாக்கி போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.


சம்பவம் குறித்துக் கேள்விப்பட்டதும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மருத்துவமனைக்கு விரைந்து சென்று டாக்டர் பாலாஜியைச் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களிடமும் பேசினார். இதுகுறித்து தற்போது உதயநிதி ஒரு பதிவைப் போட்டுள்ளார். அதில், சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் பணியில் இருந்த புற்றுநோய் பிரிவு மருத்துவர் பாலாஜி அவர்கள் மீது, அங்கு சிகிச்சையிலுள்ள ஒருவரின் குடும்பத்தைச் சேர்ந்த நபர் கொடூர முறையில் தாக்குதல் நடத்திய சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன். அரசு மருத்துவர்கள் மீதான தாக்குதல்களை ஒரு போதும் ஏற்க முடியாது.




இதுபற்றிய தகவல் அறிந்ததும், மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்பேரில், கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜிக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சையை நேரில் பார்வையிட்டு, சிகிச்சை தொடர்பான விவரங்களை மருத்துவர்களிடம் கேட்டறிந்தோம்.  மேலும், அவருடைய குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினோம்.


மருத்துவர் பாலாஜி அவர்கள் பூரண குணமடைய முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு அவருக்கு அனைத்து வகையிலும் துணை நிற்கும். அவர் விரைந்து நலம்பெற விழைகிறேன்.


அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு அங்கு சிகிச்சை செல்வோர் முழு ஒத்துழைப்பு வழங்குவதும் - அரசு மருத்துவர்களின் பணியிட பாதுகாப்பை உறுதி செய்வதும் நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.


இரவு - பகல் பாராது மக்களை காக்கும் மகத்தான பணியில் ஈடுபட்டு வரும் அரசு மருத்துவர்களுக்கு கழக அரசு என்றுமே பாதுகாப்பு அரணாகத் திகழும்.  இதுபோன்ற சம்பவங்கள் இனியும் தொடராதிருக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறியுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

என்ன நடக்கிறது... கூட்டணி மாறுகிறதா?... தேஜ கூட்டணி தலைவர்களுடன் தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ்!

news

இந்தியப் பொருளாதாரம் 6.8% வரை உயரும்.. பொருளாதார ஆலோசகர் வி. அனந்த நாகேஸ்வரன்

news

அமெரிக்க அதிபர் டிரம்ப் தலையில் இடியை இறக்கிய வாஷிங்டன் கோர்ட்.. வரி விதிப்பு செல்லாது!

news

புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை... அதிரடியாக ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1200 உயர்வு!

news

உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு...ஆர்சிபி அறிவிப்பு

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 30, 2025... வெற்றி இவங்க பக்கம் தான்

news

புதிய வாக்காளர்கள் திமுக பக்கம்...திமுக.,வின் வெற்றி நிச்சயம்...மு.க.ஸ்டாலின்

news

இங்கிலாந்து சென்று தந்தை பெரியாரின் படத்தை திறந்து வைக்க போகிறேன்: முதல்வர் முக ஸ்டாலின் பெருமிதம்!

news

தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க.. திமுக கையில் இருக்கும் 4 மேட்டர்!

அதிகம் பார்க்கும் செய்திகள்