சென்னை: அண்ணாமலையை முடிஞ்சா அண்ணா சாலை பக்கம் வரச்சொல்லுங்க. இன்றைக்கு நிகழ்ச்சி இருக்கு. அங்க தான் இருப்பேன் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு பதில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், தமிழ்நாடு கேட்கும் நிதியை வாங்கித் தர துப்பில்லை. பிரச்சினையை திசை திருப்புவதாக சவால் விடுகிறார். 2018ல் பிரதமர் மோடி வந்தபோதே எதிர்ப்புகளை கண்டு சுவரை இடித்துக் கொண்டு மாற்று வழியில் சென்றதை எல்லாரும் பார்த்துக் கொண்டு தான் இருந்தார்கள்.
என்னை ஒருமையில் அண்ணாமலை பேசியிருக்கிறார். அவர்களது தரம் அதுதான். என் வீட்டில் போஸ்டர் ஒட்டுவதாக தமிழக பாஜக தலைவர் கூறியிருந்தார். ஏற்கனவே அண்ணா அறிவாலயத்தில் எதையோ செய்வதாக தெரிவித்து இருந்தார். தைரியம் இருந்தால் அண்ணாசாலை பக்கம் வர சொல்லுங்கள். இன்றைக்கு நிகழ்ச்சி இருக்கு அங்க தான் இருப்பேன். தமிழகத்தில் நிதி உரிமையை திசை திருப்புவதற்காகவே இப்படி செய்கிறார்கள்.
தனியார் பள்ளிகளை யாராவது சட்டவிரோதமாக நடத்துகிறார்களா என்ன மத்திய அரசிடம் போதிய அனுமதியை பெற்று தான் நடத்துகிறார்கள். தனியார் பள்ளியில் யாராவது இலவச உணவையோ இலவச சீருடையோ தருகிறார்களா என்ன.. தனியார் பள்ளியில் இந்தி கற்றுக் கொடுக்கிறார்கள் என மும்மொழிக் கொள்கையுடன் தொடர்புபடுத்த வேண்டாம்.
கும்பமேளாவில் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் பாஜக திணறி வருகிறது. எத்தனை பேர் பலியானார்கள், எத்தனை பேர் காயம் அடைந்தார்கள் என்பது குறித்து அறிக்கை எதும் வெளியிடப்படவில்லை. இதற்கு முழு முதல் காரணம் பாஜக அரசு தான். கும்பமேளாவிற்கு போயிட்டு திரும்பும் போது, காசியில் தமிழக வீரர்கள் சிக்கிவரும் சம்பவம் குறித்து இன்று காலை எனக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் தமிழகம் வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நம்முடைய அதிகாரிகள் அவர்களுடன் தொடர்பு கொண்டு அவர்கள் வருவதற்கு விமான டிக்கெட்டும் போட்டு கொடுத்துள்ளனர். அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன என்று பேசியுள்ளார்.
தனியார் துறையில் முதல் வேலை பெறுவோருக்கு ரூ. 15,000.. புதிய திட்டத்தை அறிவித்தார் பிரதமர் மோடி
இன்னும் எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே சொந்த நாட்டிலே நம் நாட்டிலே?: டாக்டர் அன்புமணி
எப்போது வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போது அஜித்தை வைத்து படம் இயக்குவேன்: லோகேஷ் கனகராஜ்
சென்னையில் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம் தொடக்கம்: அமைச்சர் தங்கம் தென்னரசு
அவதூறு பரப்புகிறார்கள்..போற்றுவோர் போற்றட்டும்..புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும்..டாக்டர் ராமதாஸ்
மலையாள நடிகை மினு முனீர் கைது.. சிறுமியை தவறாகப் பயன்படுத்தியதாக சென்னையில் புகார்
பணி நிரந்தரம் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கைதுக்கு ஈபிஎஸ் கண்டனம்
Coolie Movie Review: ரஜினியின் "கூலி" படம் எப்படி இருக்கு.. தியேட்டர் அதிருதா.. இல்லை..?
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று எவ்வளவு தெரியுமா?
{{comments.comment}}