சென்னை: தனிநபர்கள் சுய உதவிக் குழுக்கள், போன்றவற்றிற்கு கடன் வழங்கும் நிறுவனங்கள் வலுக்கட்டாயமாக கடன் வசூல் செய்வது தொடர்பாக பேரவையில் இன்று புதிய மசோதாவை தாக்கல் செய்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.
தமிழக சட்டப்பேரவையில் கடந்த மார்ச் 14ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தில் அந்தந்த துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். இன்றைய பேரவை கூட்டத்தில் கேள்வி நேரம் முடிந்ததும், தனி நபர்கள் சுய உதவிக் குழுக்கள் போன்றவற்றிற்கு கடன் வழங்கும் நிறுவனங்கள் வலுக்கட்டாயமாக கடனை வசூலிப்பதால் அப்பாவி மக்கள் தற்கொலை முயற்சி வரை சென்று பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இதனை தடுக்க புதிய மசோதா ஒன்றை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்தார்.

அதன்படி, கடனை கட்டாயமாக வசூலித்தால் மூன்று ஆண்டுகள் வரை சிறைதண்டனை வழங்கப்படும். இந்த வழக்கு தொடர்பாக பிணையில் வெளியில் வர முடியாது.
மீறி கட்டாயமாக கடனை வசூலித்து கடன் பெற்றவர்கள் தற்கொலை செய்து கொண்டால் கடனை வழங்கிய நிறுவனம் தற்கொலைக்கு தூங்கியதாக வழக்கு பதிவு செய்யப்படும். அவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ஐந்து லட்சம் ரூபாய் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
கடன் பெற்றவரையோ, அவரது குடும்பத்தினரையோ நிறுவனங்கள் மிரட்டவோ, பின் தொடரவோ அவர்களது சொத்துக்களை பறிக்கவோ கூடாது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. மேலும் கடன் பெறுவோருக்கும், கடன் வழங்கும் நிறுவனத்திற்கும், இடையே உள்ள பூசல்களை தீர்த்து வைக்க குறை தீர்ப்பாயம் ஒன்றை அரசு நியமிக்கலாம் எனவும் சட்டம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு திமுக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ஆர் பி சௌத்ரி .. அவர் ஒரு அபூர்வம்!
Tamil Poem by Thirupathi: வா முதல்வா வாழ்த்துகிறோம்!
இளம் அரசு ஊழியர்களை ஒட்டுமொத்தமாக வசீகரித்த தவெக.. திமுகவின் பின்னடைவு!
தவெக சட்டசபை தலைவராக விஜய் தேர்வு.. நாளை மறு நாள் முதல்வராகப் பதவியேற்பு?
TVK needs 117: தவெக பெரும்பான்மைக்குத் தேவையான எண்ணிக்கை 118 அல்ல.. 117!
பெரும்பான்மை பெறாத தவெக.. அடுத்து என்ன நடக்கும்.. ஆளுநர் என்ன முடிவெடுப்பார்?
TVK Govt: ஆட்சி அமைக்க விஜய்க்கு ஆதரவு தரப் போவது யார்.. யாரெல்லாம் ரெடியா இருக்கா?
Mango Thokku Tips: செட்டிநாட்டு அடுப்படியின் அதிரடியில் செமையான.. கிளிமூக்கு மாங்காய் தொக்கு!
அடுத்து என்ன செய்யலாம்? தவெக முதல் அதிமுக வரை...தீவிர ஆலோசனையில் கட்சிகள்
{{comments.comment}}