காதல் உங்களை கை விட்டதா..!! இல்லை காதலிப்பவர்கள் கை விட்டார்களா..!!

Feb 14, 2023,03:28 PM IST
இங்கு எல்லா காதலும் இறுதி வரை நிலைப்பதில்லை.. சில காதலர்களால் பிரிய நேரிடும், சில விதி வினையால் நேரிடும்.. பிரிவு காதலின் தோல்வி அல்ல.. அந்த உறவின் இனிய நினைவுகள் மனதில் நிலைக்கும் வரை அந்த காதல்.. பிரிவிலும் வாழும்..

சில காதலர்கள் வாழ்வில் இணைந்தாலும், மனதளவில் காதலை மறந்து, உறவை கடமை என்ற அறைக்குள் அடைத்து விடுகின்றனர்.. ஒரு சிலரே காதலோடு இணைந்து, அந்த பந்தத்தை பாத்துக்காத்து, காதலை காதலாக மட்டுமே வாழ்ந்து நிறைகின்றனர்..

காதலின் உண்மை நிலை புரியா சிலர் காதலில் லாபம் காண்கின்றர்.. தன் துணையை ஆள முயற்சிக்கின்றர்.. ஆனால் காதலில் லாபம் நஷ்டம், வெற்றி தோல்வி, அதிகம் குறைவு, மேல் கீழ் போன்ற எதுவும் இல்லை..



அழகான காதலில் நீ எந்த மாற்றமுமின்றி நீயாக நின்று, உன் துணையோடு உறுதியான நேசத்தில் வாழ்நாள் தொடர நேரிடும்.. காதலித்தவருக்காக உன்னையும் நீ மாற்ற வேண்டியதில்லை, உன் துணையையும் அப்படியே குறை நிறைகளுடன் அன்போடு ஏற்றுக்கொள்வதில் தான் காதலின் புரிதல் உள்ளது..



காதலித்தவர் பிரிந்து சென்று விட்டால் அதை காதல் தோல்வி என்று குறிப்பிடாதீர்கள்.. எவர் மனதில் உண்மையான காதலும், உறவின் புரிதலும் இருக்கிறதோ அவர்கள் வாழ்வை விட்டும் நெஞ்சம் விட்டும் காதல் என்றும் விலகாது.. எவரிடத்தில் பொய்யும் போலி தன்மையும் தன் துணையோடு உண்மை பாசம் இல்லையோ அவர் தான் காதலில் தோற்கிறார்..

மனதில் காதல் இல்லையெனில் மண்ணில் மனிதம் இல்லை.. உண்மையான காதலோடு உங்கள் துணையோடு கொண்ட உறவை உறுதி ஆக்குங்கள்.. காதல் உங்களை என்றுமே கைவிடாது..!

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாடு அரசு சார்பில்.. தேசிய அளவிலான செம்மொழி இலக்கிய விருது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

தவெக தலைவர் விஜய் இன்று இரவே டெல்லி பயணம்?.. நாளை மீண்டும் சிபிஐ விசாரணை!

news

மக்களே.. நான் நெகிழ்ந்து போயிட்டேன்.. என்னோட மனச ஆழமா தொட்டுட்டீங்க.. ஜீவா உருக்கம்

news

தை அமாவாசை.. ராமேஸ்வரம் உள்பட நீர் நிலைகளில் திரண்ட மக்கள்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம்

news

தை அமாவாசையின் இன்னொரு சிறப்பு.. அபிராமி அந்தாதி பிறந்த கதை தெரியுமா?

news

எங்கள் வீர தீர விளையாட்டு.. இது விவேகம் நிறைந்த விளையாட்டு!

news

முப்பாலைத் தந்த முழுமதி.. அறம் வளர்த்த பேராசான்.. அக இருள் ஓட்டி அறிவை நட்டாய்!!

news

உழவனின் உயிர் நண்பன்!

news

தை அமாவாசை.. நன்றி மற்றும் ஆன்மீக சிந்தனையின் நாள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்