ரொமான்ஸுக்கு வயசே கிடையாது பாஸ்.. ஷபானா ஆஸ்மிக்கு கிஸ் கொடுத்த தர்மேந்திரா!

Jul 31, 2023,11:43 AM IST
மும்பை:  Rocky Aur Rani Kii Prem Kahaani..அதாவது "ராக்கி , ராணியின் காதல்  கதை".. இந்தப் படம் பாலிவுட்டில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது.. படத்தின் ஜோடியான ரன்வீர் சிங் - ஆலியா பட்டின் கெமிஸ்ட்ரிக்காக மட்டும் அல்ல.. படத்தில் வரும் ஒரு முத்தக் காட்சிக்காகவும்தான்.

முத்தக் காட்சி என்றதும் ரன்வீர் சிங் - ஆலியா பட் என்று தப்பா நினைச்சுடாதீங்க.. இது தர்மேந்திரா - ஷபானா ஆஸ்மியின் முத்தக் காட்சி. அடடா நம்ம தர்மேந்திராவா என்று பலரும் ஆச்சரியப்படும் அளவுக்கு ரொமான்ஸில் கலக்கியுள்ளார் தர்மேந்திரா.

தர்மேந்திரா பட நிறுவனத்தின் லேட்டஸ்ட் தயாரிப்புதான் இந்த Rocky Aur Rani Kii Prem Kahaani. படத்திற்கு இளைஞர்கள், இளம் பெண்களிடையே செம வரவேற்பாம். காரணம் ஆலியா பட், ரன்வீர் சிங் ஜோடி பிரித்து மேய்ந்திருக்கிறதாம் படத்தில். படத்தில் இவர்களது கெமிஸ்ட்ரி சூப்பராக ஒர்க் அ��ுட் ஆயுள்ளதோடு, கரண் ஜோஹரின்  இயக்கமும் சேர்ந்து கொள்ளவே பட் ஹிட்டடித்துள்ளது.

இப்படத்தில் கூடுதலாக ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்தது தர்மேந்திரா - ஷபானா ஆஸ்மியின் முத்தக் காட்சிதான். அந்தப் படத்தில் இருவரும் ஒரு பழைய பாடலை பாடியபடி வரும் காட்சி இடம் பெறுகிறது. அந்த பாடல் காட்சியின்போது தர்மேந்திரா, ஷபானா ஆஸ்மிக்கு அழகான முத்தம் ஒன்றைக் கொடுக்கிறார்.  அது ஒரு தேவ் ஆனந்த் படப் பாடலாகும்.  முகம்மது ரபி  - ஆஷா போன்ஸ்லே பாடிய பாடல் அது. அந்தப் பாடலைத்தான் இந்த இருவருக்கும் வைத்துள்ளனர். அந்த சீன் ரசிகர்களிடையே செம வரவேற்பைப் பெற்றுள்ளதாம். இந்த வயதிலும் பின்னியிருக்கிறார் தர்மேந்திரா என்று ரசிகர்கள் சிலாகித்து வருகின்றனர்.



இதுகுறித்து தர்மேந்திராவிடமே கேட்கப்பட்டது.. அதற்கு அவர்,  எங்களது முத்தக் காட்சி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளதாக அறிகிறேன். இதை யாரும்  எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். திடீரென்று வந்ததால் அவர்களுக்கு ஆச்சரியமாகி விட்டது. இதற்கு முன்பு நபீசா அலிக்கு, நான் லைப் இன் எ மெட்ரோ படத்தில் முத்தம் கொடுத்தபோதும் கூட ரசிகர்கள் அதைப் பாராட்டினர்.

இந்த சீனை இயக்குநர் கரண் ஜோஹர் என்னிடம் விளக்கியபோது எனக்கு எந்த எக்சைட்மென்ட்டும் இல்லை. சீனின் அவசியத்தை ஷபானாவும் கூட புரிந்து கொண்டார். இது அந்த சீனுக்குத் தேவைப்பட்டது. எதையும் கரண் ஜோஹர் புகுத்தவில்லை. நான் பண்றேன்னு உடனே சொல்லிட்டேன். அதை விட முக்கியமாக ரொமான்ஸுக்கு வயதே கிடையாது. வயது வெறும் நம்பர்தான். வயதைத் தாண்டி இருவரும் வெளிப்படுத்திக் கொள்ளும் காதல் இது. முத்தம் அன்பின் வெளிப்பாடு. அதைத்தான் நாங்கள் அந்தக் காட்சியில் செய்துள்ளோம். எனக்கும் சரி, ஷபானாவுக்கும் சரி இதில் எந்தவிதமான மனக்கிலேசமும் ஏற்படவில்லை. இயல்பாக நடித்தோம் என்றார் தர்மேந்திரா.

ஜூலை 28ம் தேதி இப்படம் திரைக்கு வந்து ஓடிக் கொண்டிருக்கிறது. கரண் ஜோஹர் 7 ஆண்டுகளுக்கு முன்புதான் கடைசியாக படம் இயக்கியிருந்தார். அதன் பின்னர் அவர் அந்தப் பக்கமே திரும்பிப் பார்க்கவில்லை. இதனாலும் கூட இந்தப் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்