உயிரின் உறவு அம்மா!

Sep 17, 2026,04:02 PM IST

- டிலாணி ஸ்ரீதரன், பதுளை, இலங்கை


தமிழ்ப்பால் தந்தவளே 

உதிரத்தால் ஈன்றவளே, 


ஈர்ப்பால் இணைத்தவளே 

இதயத்தால் நிறைத்தவளே, 


வரத்தால் வார்த்தவளே 

பலத்தால் தாங்கியவளே, 


சிரத்தால் கொஞ்சியவளே 

சிரிப்பால் வென்றவளே, 




கர்ப்பத்திலே கற்பித்தவளே, 

காலத்தால் வித்திட்டவளே 


தாலாட்டால் இசைப்பவளே, 

தாய்ப்பாலை உணவாக்கியவளே, 


கரத்தால் அணைத்தவளே, 

முத்தத்தால் நனைத்தவளே,


வீழ்ந்தாலும் உன் மடி மீது விழுந்து மரணிக்க வேண்டும் 

என்றும் உன் பிள்ளையாய்!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்