சிவகார்த்திகேயனின் 23வது படம்.. ஏ.ஆர். முருகதாஸுடன் கைகோர்க்கும்.. மதராஸி.. 90% ஷூட்டிங் ஓவர்!

Feb 17, 2025,04:33 PM IST

சென்னை: சிவகார்த்திகேயன் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் இணைந்துள்ள படத்திற்கு மதராஸி என பெயர் சூட்டப்பட்டுள்ளது.


சிவகார்த்திகேயன் இன்று தனது 40வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்கள் மற்றும் முக்கிய பிரபலங்கள் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சிவகார்த்திகேயன் நடித்து வரும் படங்கள் குறித்த அப்டேட்டும் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன் நடித்து வரும் பராசக்தி திரைப்படத்தின் மேக்கிங் வீடியோவை அந்த படத்தின் இயக்குனர் சுதா கொங்கரா ஷேர் செய்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


அதுமட்டும் இன்றி, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த வரும் படத்திற்கு மதராஸி என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த படம் சிவகார்த்திகேயனுக்கு 23வது படமாகும். கடந்த 2023ம் ஆண்டு தொடங்கிய இப்படத்துக்கு பெயரிடப்படாமல் சுமார் 90 சதவீத படப்பிடிப்பை முடித்துவிட்டார்களாம். தற்போது சிவகார்த்திகேயன் பிறந்த நாளை முன்னிட்டு இதன் பெயர் மற்றும் பெயருடன் கூடிய அறிமுகம் வீடியோவை பட குழு வெளியிட்டுள்ளது. 




இந்த படத்தில் துப்பாக்கி பட வில்லனாக நடித்து பிரபலமான வித்யுத் ஜம்வால், பிஜி மேனன், ருக்மணி வசந்த், விக்ராந்த், ஷபீர் உள்ளிட்ட பலர் சிவகார்த்திகேயனுடன் நடித்துள்ளனர். இப்படத்திற்கு  இசையமைத்துள்ளார் அனிருத். எடிட்டராக ஸ்ரீகர் பிரசாத் ஆகியோர் பணிபுரிந்து உள்ளனர். இப்படத்தினை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. 


இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளதாம்.  இந்த ஆண்டு தீபாவளிக்கு இப்படம் வெளியாகும் என கூறப்படுகிறது. இப்படத்தில் வேறு எந்த படத்திலும் பார்த்திராத சிவகார்த்திகேயனை இந்த படத்தில் பார்க்கும் வாய்ப்பு இருக்கும் என்றும் படகுழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மதராஸி படத்தில் சிவகார்த்திகேயனின் உடல் மொழி மிகப்பெரிய அளவில் பேசப்படும் என்ற தகவலும் வெளியாகி வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வெற்றிகரமாக தொடங்கிய வட கிழக்குப் பருவ மழை.. தமிழ்நாடு முழுவதும் ஜில் ஜில் கூல் கூல்!

news

24ம் தேதி வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

news

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

news

சென்னையில் எப்ப Rain சீன் தெரியுமா.. 23 டூ 30.. செம மழை இருக்காம்.. என்ஜாய் பண்ண ரெடியாகுங்க!

news

கச்சத்தீவை மீட்க வேண்டும் - பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

news

கரூர் உயிரிழப்பு சம்பவம்: உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது: சீமான்!

news

அன்புமணி தனிக்கட்சி ஆரம்பித்துக் கொள்வது நல்லது.. கட்சி தொடங்குமாறு 3 முறை சொல்லி விட்டேன்: ராமதாஸ்!

news

ரயில் பயணிகளுக்கு புதிய வசதி.. கேன்சல்லேஷன் கட்டணம் இல்லாமலேயே டிக்கெட்டை மாத்திக்கலாம்!

news

புதிய உச்சத்தில் தங்கம் விலை...ஒரு கிராம் ரூ.12,000 ஐ நெருங்கியது... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்

அதிகம் பார்க்கும் செய்திகள்