சென்னை: நடிகை எமி ஜாக்சன் தனது காதலரும், நடிகருமான எட் வெஸ்விக்கை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களது திருமணம் இத்தாலியில் நடந்துள்ளது.
இங்கிலாந்தைச் சேர்ந்தவர் எமி ஜாக்சன். மதராச பட்டணம் படம் மூலம் நடிகரானவர். தொடர்ந்து தமிழில் பல்வேறு படங்களில் இவர் நடித்துள்ளார். இவரது முதல் படமான மதராச பட்டணத்தை இயக்கியவர் இயக்குநர் விஜய். இதனால் அவர் மீது தனி மதிப்பும், மரியாதையும் வைத்திருக்கிறார்.

இந்த நிலையில் இவர் ஹாலிவுட் நடிகரான வெஸ்ட்விக்கை காதலித்து வந்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர். திருமணத்தை மிகப் பெரிய அளவில் இத்தாலியில் உள்ள காஸெல்லா டி ரோக்கா நகரில் ஏற்பாடு செய்திருந்தனர். 200க்கும் மேற்பட்டோருக்கு திருமணத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதில் நம்ம ஊர் இயக்குநர் விஜய்யும் ஒருவர்.
இதுதொடர்பாக இயக்குநர் விஜய் கூறுகையில், அன்புள்ள எமி மற்றும் எட், உங்கள் அழகான திருமணத்திற்கு வாழ்த்துக்கள். இரண்டு அற்புதமான இதயங்கள் ஒன்றிணைந்த அழகான இந்தத் திருமணத்தில் நானும் கலந்து கொண்டது மகிழ்ச்சி. உங்கள் இருவருக்கும் வாழ்நாள் முழுவதும் சிரிப்பு மற்றும் முடிவில்லாத மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என விரும்புகிறேன். இருவரும் ஒன்றாக இணைந்து வாழும் அற்புதமான வாழ்க்கை இன்றில் இருந்து தொடங்கி இருக்கிறது என்று கூறியிருந்தார்.
எமி ஜாக்சன் கல்யாணத்தைத் தொடர்ந்து பல்வேறு பிரபலங்களும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மேகதாதுவில் அணை கட்ட அனுமதி தரக் கூடாது.. மத்திய அரசை வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம்
மேகதாது அணை விவகாரம்... ஜூலை 23 டெல்லியில் ஆர்ப்பாட்டம்: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு
தவெக.,விற்கு எதிரான குதிரை பேர வழக்கு தள்ளுபடி...உச்ச நீதிமன்றம் அதிரடி
தமிழகத்தில் இன்று வெளுத்து வாங்கப்போகும் கனமழை: 18 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
ஆஸ்திரேலியா செல்லும் மாணவர்களுக்கான விசா கட்டணம் அதிரடி உயர்வு!
சட்டசபை நேரலை ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது ஏன்?...இபிஎஸ் சரமாரி கேள்வி
'தடை நியாயமானதே..' டெலிகிராம் செயலிக்கு மத்திய அரசு விதித்த தடையை நீக்க மறுப்பு!
ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி, முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து
முதல் முறை வேலைக்குச் சேர்ந்தவர்களுக்கு இபிஎஃப் ரூ.15,000 ஊக்கத்தொகை
{{comments.comment}}