சென்னை: பிரபல இயக்குனர் ஹரியின் தந்தை வி.ஆர். கோபாலகிருஷ்ணன் சென்னையில் இன்று காலமானார்.
இயக்குனர் ஹரியின் தந்தை வி.ஆர் கோபாலகிருஷ்ணன். இவருக்கு வயது 88 . இரண்டு மகள்கள் மற்றும் ஐந்து மகன்கள் உள்ளனர். உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை இயற்கை எய்தினார்.

இவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள இயக்குனர் ஹரியின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. திரை உலகினரின் அஞ்சலிக்காக இன்று பிற்பகல் 2 மணி வரை வைக்கப்பட்டு பின்னர் சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் கச்சனாவிளைக்கு கொண்டு செல்லப்பட்டு நாளை இறுதி சடங்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் ஹரி, விஜயகுமாரின் மருமகன் ஆவார். நடிகை ப்ரீதா விஜயகுமாரை திருமணம் செய்துள்ளார். அவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளன.
ஹரி இயக்கிய படங்கள் அனைத்தும் அதிரடி மற்றும் காமெடி நிறைந்த மசாலா திரைப்படமாகவே இருக்கும். இதுவரை 12 படங்கள் வரை இயக்கி உள்ளார். சாமி ,கோவில், அருள் ,ஐயா ,ஆறு, தாமிரபரணி, வேல் ,சேவல் ,சிங்கம், வேங்கை ,பூஜை என பல்வேறு வெற்றி படங்களை தந்த இயக்குனர் ஆவார். அவரது தந்தை மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஜெம் கிரானைட்ஸ் வீரமணி வழக்கில் லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் யார்? விசாரிக்க சிறப்பு குழு அமைப்பு!
"நிர்வாக அறிவு இருக்கிறதா?" – தவெக அரசை கடுமையாக விமர்சித்து மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
குற்றவாளிகள் ஒருவரையும் விடக்கூடாது: ஜெம் கிரானைட்ஸ் வீரமணி விவகாரத்தில் முதல்வர் அதிரடி உத்தரவு
ஜெம் கிரானைட் வீரமணி விவகாரம்: தவெக-திமுக இடையே முற்றும் மோதல்
ஆளுக்கு 8 ஓட்டு.. 9 மாத மழலை எடுத்துக் கொடுத்த சீட்டு.. கலகலப்பாக முடிந்த பள்ளித் தலைவர் தேர்தல்!
நடிகை அம்பிகா மீது சகோதரி ராதா பரபரப்பு புகார்: ரூ.46 கோடி மோசடி செய்ததாக போலீசில் புகார்
வங்கக்கடலில் தீவிரமடையும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!
ஏகாந்தம்.. அழகிய முழு நிலவொளியில் ஆனந்த ராகம் பாடி!
Short Story: காணாமல் போன கண்ணன்
{{comments.comment}}