சென்னை: இயக்குநர் செல்வராகவன் அதிரிபுதிரியாக இயக்குநராக தனது 2வது இன்னிங்ஸைத் தொடங்கியுள்ளார். முதலில் ஜி.வி பிரகாஷை வைத்து அவர் இயக்கப் போகும் படம் கடந்த மாதம் வெளியானது. இந்த நிலையில் தற்போது அவரது சூப்பர் ஹிட் படத்தின் தொடர்ச்சியை இயக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் வித்தியமான கதைக் களத்துடன் படங்களை இயக்கி தனி முத்திரை பதித்து ரசிகர்களிடையே செமத்தியான தாக்கத்தை ஏற்படுத்தியவர் இயக்குநர் செல்வராகவன்.
துள்ளுவதோ இளமை படத்தில் ஸ்கிரிப்ட் ரைட்டராக ஆரம்பித்த இவரது திரையுலக வாழ்க்கையில் மைல் கல் படங்கள்தான் அதிகம். காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், என்ஜிகே, நெஞ்சம் மறப்பதில்லை, நானே வருவேன் என்று இவர் இயக்கிய படங்கள் குறைவுதான் என்றாலும் கூட செல்வா படங்கள் என்றாலே ரசிகர்கள் மெர்சல் ஆகும் அளவுக்கு ஒவ்வொரு படமும் ஒரு வகையில் முத்திரை பதித்த படங்கள்தான்.

இதில் யாரடி நீ மோகினி படத்தின் ஸ்கிரிப்ட் இவருடையது. மாலை நேரத்து மயக்கம் படத்தின் ஸ்கிரிப்ட்டும் கூட செல்வாதான். அதன் பின்னர் இடையில் நடிகராக அவதாரம் எடுத்த செல்வா, இயக்கத்தை கிட்டத்தட்ட நிறுத்தி விட்டார். எப்போது புதுப்பேட்டை 2, எப்ப ஆயிரத்தில் ஒருவன் 2 வரும் என்று போகும் இடமெல்லாம் அவரைக் கேட்டுத் துளைத்தெடுத்தனர் ரசிகர்கள். இந்த நிலையில் தற்போது மீண்டும் இயக்குநராக பிசியாகிறார் செல்வராகவன்.
ஜிவி.பிரகாஷ் தயாரிப்பில் உருவாகும் மென்டல் மனதில் படத்தை செல்வா இயக்குகிறார். இந்த நிலையில்தான் புத்தாண்டு தினமான இன்று அட்டகாசமான அப்டேட்டைக் கொடுத்துள்ளார் செல்வராகவன். 7ஜி ரெயின்போ காலனி படத்தின் 2ம் பாகத்தை எடுக்கும் அறிவிப்புதான் அது. இப்படம் இளைஞர்களிடையே ஏற்படுத்திய தாக்கம் இன்று வரை அப்படியேதான் உள்ளது. இதன் கதை, நடிப்பு, குறிப்பாக பாடல்கள் இளசுகளை கட்டிப் போட்டது. இன்று வரை இளைஞர்களின் மனதைக் கவ்வி எடுக்கும் பாடலாக இது இருக்கிறது.
இந்தப் படத்தின் 2ம் பாகத்திற்காக மீண்டும் யுவன் ஷங்கர் ராஜா, ஏ.எம். ரத்னம் ஆகியோர் இணைகிறார்கள். செல்வாவின் ஆஸ்தான கேமராமேன் ராம்ஜி இதிலும் இணைகிறார். படத்தில் ஹீரோ , ஹீரோயின் யார் என்று தெரியவில்லை. அதுதான் பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் யுவன் இப்படத்தில் இடம் பெற்றிருப்பது ரசிகர்களை துள்ளாட்டம் போட வைத்துள்ளது. தலைவா.. சீக்கிரம் ஆரம்பிச்சு சட்டுப் புட்டுன்னு தியேட்டருக்குக் கொண்டு வாங்கன்னு ரசிகர்கள், செல்வாவை வாழ்த்த ஆரம்பித்து விட்டனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஓபிஎஸ்.,க்கு இடமில்லை...ஸ்டாலினுக்கு அனுபவமில்லை...விஜய் தலைவரே அல்ல...வெளுத்து வாங்கிய இபிஎஸ்
நான் ரெடி.. அருமை அண்ணன் இபிஎஸ்ஸுடன் பேச டிடிவி தினகரன் தயாரா.. ஓ.பி.எஸ். அதிரடி சவால்!
பிப்ரவரி 3ம் தேதி கூட்டணியை அறிவிக்கும் தேமுதிக.. யாருடன் இணைகிறது?
தமிழக வாக்காளர் பட்டியல் 2026...பெயர் சேர்க்க 10 நாட்கள் கால அவகாசம் நீட்டிப்பு
மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும்... பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
முருக பக்தர்களுக்கு குட் நியூஸ்...தைப்பூசத்திற்கு சென்னையில் இருந்து சிறப்பு ரயில்
அக்கறையற்ற அமைச்சரின் பேச்சு... வேதனைக்குரியது மட்டுமல்ல கண்டனத்திற்குரியதும்: எடப்பாடி பழனிச்சாமி
நெல்லை தொகுதியையும், என்னையும் பிரித்து பார்க்க முடியாது: நயினார் நாகேந்திரன்
டி20 உலகக் கோப்பை: இந்தியாவைப் புறக்கணிக்கும் முடிவில் பாகிஸ்தான் தீவிரம்?
{{comments.comment}}