நடிகை திவ்யா ஸ்பாந்தனா சூப்பர் நலமாக இருக்கிறார்.. வதந்திகளை நம்பாதீங்க!

Sep 06, 2023,12:58 PM IST
பெங்களூரு: நடிகை திவ்யா ஸ்பாந்தனா வதந்திகள் பரவி வரும் நிலையில் அவர் நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகத்தைச் சேர்ந்தவர் திவ்யா ஸ்பாந்தனா. நடிகையான இவர் கன்னடத்தில் பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் குத்து படத்தின் மூலம் அறிமுகமானார். இதனால் அவருக்கு குத்து ரம்யா என்ற செல்லப் பெயரும் உண்டு.



பொல்லாதவன், வாரணம் ஆயிரம் என்று பல்வேறு தமிழ்ப் படங்களிலும் திவ்யா நடித்துள்ளார். இடையில் அரசியலிலும் இறங்கினார். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து செயல்பட்டு வந்தார். தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவரும் கூட.

இந்த நிலையில், அவர் குறித்து காட்டுத் தீ போல வதந்திகள் பரவ ஆரம்பித்தன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் திவ்யா நலமாக இருப்பதாகவும், அவர் தற்போது சுவிட்சர்லாந்தில் இருப்பதாகவும், நாளை அவர் பெங்களூரு திரும்புவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது ஜெனீவாவில் திவ்யா இருக்கிறாராம். இதுகுறித்து சில ஊடகவியலாளர்களும் திவ்யாவிடமே பேசி தகவல் வெளியிட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

திவ்யா குறித்த வதந்தியை யார் கிளப்பியது என்று தெரியவில்லை. ஆனால் மின்னல் வேகத்தில் பரவிய இந்த வதந்தியால் கர்நாடகா மட்டுமல்லாமல் தென்னிந்தியா முழுவதுமே பரபரப்பாகி விட்டது. இருப்பினும் அது வதந்தி என்பது தற்போது உண்மையாகியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

ஜெம் கிரானைட்ஸ் வீரமணி வழக்கில் லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் யார்? விசாரிக்க சிறப்பு குழு அமைப்பு!

news

"நிர்வாக அறிவு இருக்கிறதா?" – தவெக அரசை கடுமையாக விமர்சித்து மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

news

குற்றவாளிகள் ஒருவரையும் விடக்கூடாது: ஜெம் கிரானைட்ஸ் வீரமணி விவகாரத்தில் முதல்வர் அதிரடி உத்தரவு

news

ஜெம் கிரானைட் வீரமணி விவகாரம்: தவெக-திமுக இடையே முற்றும் மோதல்

news

ஆளுக்கு 8 ஓட்டு.. 9 மாத மழலை எடுத்துக் கொடுத்த சீட்டு.. கலகலப்பாக முடிந்த பள்ளித் தலைவர் தேர்தல்!

news

நடிகை அம்பிகா மீது சகோதரி ராதா பரபரப்பு புகார்: ரூ.46 கோடி மோசடி செய்ததாக போலீசில் புகார்

news

வங்கக்கடலில் தீவிரமடையும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!

news

ஏகாந்தம்.. அழகிய முழு நிலவொளியில் ஆனந்த ராகம் பாடி!

news

Short Story: காணாமல் போன கண்ணன்

அதிகம் பார்க்கும் செய்திகள்